அடேங்கப்பா...ரஜினியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாய்பிளக்கும் நெட்டிசன்கள்!

First Published May 15, 2022, 12:24 PM IST

இன்றைய முன்னணி நாயகர்களே 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் பொழுது ரஜினி சினிமா வாழ்க்கையில் நுழைந்து 60 ஆண்டுகள்ஆகும் நிலையில் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்கிற யூகம் சமூகவலைத்தளத்தில் உலா வரத்தான் செய்கிறது. 

rajinikanth

சிகரம் தொட்ட சூப்பர் ஸ்டார் :

70 களில்  அசைக்கமுடியாத ரசிகர் சாம்ராஜ்யத்தை நிறுவுள்ளவர் ரஜினி காந்த். இவர் 1975 ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்.  சிவாஜி என்னும் இயற்பெயரை மாற்றி ரஜிகாந்தாக சிறிய ரோலில் நடிக்க துவங்கி, வில்லன், செகண்ட் ஹீரோ, ஹீரோ என படிப்படியாக வளர்ந்து இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.  

rajinikanth

80களில் சூப்பர் ஹிட் மூவிஸ் :

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி முத்திரை பதித்த நான் சிவப்பு மனிதன், படிக்காதவன், ஊர்காவலன்,  குரு சிஷ்யன்,     தர்மத்தின் தலைவன், சிவா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தது.

rajinikanth

பின்னர் 90களில் :

90களின் முற்பாதியில் ரஜியின் பணக்காரன்,    முத்து, அதிசயப் பிறவி,    தர்ம துரை,  பாட்ஷா, நாட்டுக்கு ஒரு நல்லவன், தளபதி, மன்னன்    , அண்ணாமலை, பாண்டியன், எஜமான், உழைப்பாளி, வள்ளி, வீரா, பாட்ஷா, ஆண்டவன்,முத்து, அருணாச்சலம்,    படையப்பா வரிசையாக ஹிட் அடித்த படங்களில் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஆக்கரமித்து சூப்பர் ஸ்டாரை வசூல் மன்னன் ஆக்கியது.

rajinikanth

அரசியலில் சூப்பர் ஸ்டார் :

பின்னர் மெல்ல மெல்ல தனது திரைப்பட ஒப்பந்தங்களை குறைத்து கொண்ட ரஜினிகாந்த் ரசிங்கர்களின் நீண்ட நாள் ஆசையான அரசியலுக்கு வருவார் என்னும் எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது. அந்த சமயத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான காலா, கபாலீ போன்ற பாடங்களில் தலைவனுக்கான தோணி தென்பட்டது. அதோடு அரசியல் கட்சி துவங்குவதற்கான ஆயத்த பணிகளும் நடைபெற்றது. ஆனால் தலைவராவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் சூப்பர் ஸ்டார் பதவி மட்டும் போதும் என கூறி இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை அணித்தனமாக அறிவித்து விட்டார்.

rajini169

சன்பிக்சர்ஸ் கூட்டணி :

இதையடுத்து சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சங்களை பெர்ரத்திடுங் பாக்ஸ் ஆஃபீஸிலும் மிதமான வசூலையை பெற்றது. இதையடுத்து தற்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் பீஸ்ட் இயக்குனர் நெல்சன் உடன் கையோர்த்துள்ளார் ரஜினி.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ட்டுள்ளது.

rajinikanth

கசிந்த சொத்து மதிப்பு :

தற்போது 169 வது படித்தில் கமிட் ஆகியுள்ள ரஜினியின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இன்றைய முன்னணி நாயகர்களே 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் பொழுது ரஜினி சினிமா வாழ்க்கையில் நுழைந்து 60 ஆண்டுகள்ஆகும் நிலையில் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்கிற யூகம் சமூகவலைத்தளத்தில் உலா வரத்தான் செய்கிறது. அதன்படி தற்போது ரஜினியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.. 410 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

click me!