பீஸ்ட் நஷ்டம்..விநியோகஸ்தர்களுக்கு தயவு காட்டிய சன் பிக்சர்ஸ்

Kanmani P   | Asianet News
Published : May 14, 2022, 09:01 PM IST

பீஸ்ட் படத்தால் வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்குஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் சூப்பர் வேலையை சன் பிக்சர்ஸ் செய்துள்ளது.

PREV
15
பீஸ்ட் நஷ்டம்..விநியோகஸ்தர்களுக்கு தயவு காட்டிய சன் பிக்சர்ஸ்
beast

நெல்சன் இயக்கத்தில் விஜயின் 65 வது படமான பீஸ்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் கடந்த 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன்,  ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரம்  நடித்துள்ளனர்.

25
beast

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி இந்த படம் பீரி ரிலீஸ் மூலம் ரூபாய் 100 கோடியை வசூலித்த இந்த படம் 5 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

35
beast

இந்த படத்திலிருந்து சிவகார்த்திகேயன் எழுதி இருந்த அரபி குத்துப்பாடல் யூடியூபில் 195 மில்லியனுக்கு மேல் மேல் பார்வையாளர்களை பெற்று மாஸ் காட்டி இருந்தது. அதோடு இன்ஸ்டா ஸ்டோரியில் அரபு குத்துதான் பட்டிதொட்டியெல்லாம் பரவியிருந்தது.

45
beast

உள்ளூரில் விலை போனாலும்  இப்படம் தீவிரவாதத்தை பற்றிய சர்ச்சை கருத்துக்களை கூறியதாக சொல்லி, படத்தை குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யவும் செய்துவிட்டனர். அதோடு , குவைத், கத்தாரில் படு தோல்வியை சந்தித்தது.

55
sun pictures

இந்த படத்தின் நஷ்டம் குறித்து வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடம் விசாரித்துள்ளது சன்பிக்சர்ஸ் நிறுவனம் . அதன்படி, குவைத்தில் ஒரு 2.50 கோடி , கத்தாரில் 80 லட்சம் நஷ்டமாகும் நிலை என அறிந்த சன் பிக்ச்சர்ஸ், உடனடியாக அந்த பணத்தை கழித்துவிட்டு, மீதி பணம் மட்டும் கொடுத்துவிடுங்கள் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories