பிக்பாஸ் பாவனியை காதலித்து ஏமாற்றிவிட்டாரா அமீர்? இன்ஸ்டா பதிவால் ஷாக் ஆன ரசிகர்கள்

First Published | Aug 11, 2023, 12:39 PM IST

பிக்பாஸ் அமீரும், சீரியல் நடிகை பாவனியும் காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் காதலித்த ஜோடிகள் ஏராளம். அதிலும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகிக் கொண்டு தான் இருக்கிறது. அதன்படி முதல் சீசனில் ஆரவ்வை நடிகை ஓவியா உருகி உருகி காதலித்து வந்தார். இதையடுத்து இரண்டாவது சீசனில் மகத்தை நடிகை யாஷிகா துரத்தி துரத்தி காதலித்தார். மூன்றாவது சீசனில் கவின் - லாஸ்லியாவின் காதல் தான் ஹைலைட்டாக பேசப்பட்டது.

பின்னர் நான்காவது சீசனில் ஷிவானியும், பாலாஜி முருகதாஸும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. பின்னர் வெளியே வந்த பின்னர் தாங்கள் இருவரும் நண்பர்கள் என இருவரும் சொல்லிவிட்டனர். இதையடுத்து ஐந்தாவது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நடன இயக்குனர் அமீர், சீரியல் நடிகை பாவனியை துரத்தி துரத்தி காதலித்து வந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அமீரின் காதலை பாவனி ஏற்கவில்லை.

இதையும் படியுங்கள்... சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள்

Tap to resize

இதையடுத்து வெளியே வந்த பின்னர் பாவனிக்கும் அமீர் மீது காதல் ஏற்பட, இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்தனர். இருவரும் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தில் கூட ஜோடியாக நடித்திருந்தனர். இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்பது தான் ரசிகர்கள் தொடர்ந்து முன்வைத்து வந்த கேள்வியாக இருந்தது. ஆனால் அதற்கு இருவருமே பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்தனர்.

இதனிடையே இருவரும் இணைந்து திரைப்படம் ஒன்றில் ஜோடியாக நடிக்க உள்ளதாகவும், அப்படத்தை அமீர் இயக்க உள்ளதாகவும் அறிவிப்பெல்லாம் வெளிவந்தது. இப்படி உருகி உருகி காதலித்து வந்த அமீர் - பாவனி ஜோடி பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார்களா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு காரணம் பாவனியின் இன்ஸ்டா பதிவு தான்.

அண்மையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடினார் பாவனி. அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என கேள்வி எழுப்பினார். அதற்கு பாவனி ஆமாம் என பதிலளித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ அமீர் உடனான காதல் பிரேக் அப் ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து பாவனி எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

இதையும் படியுங்கள்... லட்சுமி மேனன் உடன் திருமணமா?... விஷயம் பெரிதானதால் உண்மையை போட்டுடைத்த விஷால்

Latest Videos

click me!