ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், அப்படத்தின் நாயகன் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு கிளம்பினார். சென்னையில் இருந்து விமானம் மூலம் டேராடூன் சென்ற ரஜினிகாந்த், அங்கு 7 நாட்கள் தங்கி ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள உள்ளார்.
இமயமலையில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு செல்லும் ரஜினிகாந்த், அங்குள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று அங்கு தியானம் செய்துள்ளார். அவர் ஆசிரமத்தில் உள்ளவர்களிடம் சிறப்புரையும் ஆற்றி இருக்கிறார். அதோடு அங்குள்ள ஆன்மீக குருக்களின் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கி இருக்கிறார் ரஜினி.
நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு வார ஆன்மீக பயணத்தை முடித்த பின்னர் சென்னை திரும்பும் ரஜினிகாந்த், டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இதையும் படியுங்கள்... லட்சுமி மேனன் உடன் திருமணமா?... விஷயம் பெரிதானதால் உண்மையை போட்டுடைத்த விஷால்