ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் கலந்த டார்க் காமெடி திரைப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, யோகிபாபு, விநாயகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் மோகன்லால், ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார், தமன்னா ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
உலகளாவிய வசூல்
ஜெயிலர் திரைப்படம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. ஒரு படத்தின் வெற்றி அதன் வசூலை வைத்து தான் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் ஜெயிலர் திரைப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து மாஸ் காட்டி வருகிறது. அதன்படி இப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.95.78 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி. இதன்மூலம் இந்த ஆண்டு முதல் நாளில் அதிக வசூல் குவித்த தமிழ் படம் என்கிற சாதனையை ஜெயிலர் படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... பீஸ்ட்டை விட கம்மி வசூல்... தமிழ்நாட்டில் ஜெயிலருக்கு இப்படி ஒரு நிலைமையா? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
ஆந்திரா நிலவரம்
தமிழகத்தை பொருத்தவரை ஜெயிலர் திரைப்படம் ரூ.29.46 கோடி வசூலித்து இருக்கிறது. அதேபோல் அண்டை மாநிலமான ஆந்திராவில் இப்படம் ஒரே நாளில் ரூ.12.04 கோடி வசூலித்து உள்ளது. ஜெயிலர் படத்துக்கு கிடைத்துள்ள ஏகோபித்த வரவேற்பால், ஆந்திராவில் அப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறதாம்.
கர்நாடகாவில் சாதனை
கர்நாடகாவில் ஜெயிலர் திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இப்படம் கர்நாடக மாநிலத்தில் மட்டும் முதல் நாளில் ரூ. 11.92 கோடி வசூலித்து உள்ளது. இதன்மூலம் கபாலி பட சாதனையை முறியடித்துள்ளார் ரஜினி. கபாலி திரைப்படம் 10.9 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது ஜெயிலர் முறியடித்து உள்ளது.
கேரளாவில் முதலிடம்
கேரளாவில் இப்படம் ரூ. 5.38 கோடி வசூலித்து உள்ளது. இதன்மூலம் முதல் நாளில் அதிக வசூல் குவித்த தமிழ் படம் என்கிற சாதனையை ஜெயிலர் படைத்துள்ளது. இதற்கு முன்னர் வாரிசு திரைப்படம் முதல்நாளில் ரூ.3.5 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை ரஜினியின் ஜெயிலர் முறியடித்து முதலிடம் பிடித்துள்ளது.