நடிகை ரெஜினாவுக்கு உம்மா கொடுத்தாரா அனிருத்? காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்

Published : Feb 05, 2025, 12:29 PM ISTUpdated : Feb 05, 2025, 01:00 PM IST

விடாமுயற்சி படத்தின் இசையமைப்பாளர் அனிருத், அப்படத்தில் வில்லியாக நடித்து ரெஜினாவுக்கு உம்மா கொடுத்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.

PREV
14
நடிகை ரெஜினாவுக்கு உம்மா கொடுத்தாரா அனிருத்? காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்
சர்ச்சையில் சிக்கிய அனிருத்

கோலிவுட்டில் நம்பர் 1 இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவரின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருந்தது. குறிப்பாக நடிகை ஆண்ட்ரியாவை அவர் காதலித்தபோது இருவரும் லிப்லாக் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் லீக் ஆகி இணையத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் நடிகர் சிம்புவுடன் சேர்ந்து பீப் சாங் பாடலுக்கு இசையமைத்து அடுத்த சர்ச்சையில் சிக்கினார் அனிருத். இப்படி சர்ச்சைக்குரிய இசையமைப்பாளராக வலம் வந்த அவர், தற்போது எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் பிசியான மியூசிக் டைரக்டராக வலம் வருகிறார்.

24
அனிருத் லைன் அப்

அனிருத் கைவம் தற்போது தமிழில் அஜித்தின் விடாமுயற்சி, விஜய் நடிக்கும் ஜனநாயகன், ரஜினிகாந்தின் கூலி, கமலின் இந்தியன் 3 உள்பட அரை டஜன் படங்கள் உள்ளன. இதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் ஷாருக்கான் நடிக்க உள்ள புதிய படத்திற்கு இசையமைக்க உள்ளார் அனி. மேலும் தெலுங்கில் நானி, விஜய் தேவரகொண்டா ஆகியோரின் படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இப்படி பான் இந்தியா அளவில் செம பிசியான இசையமைப்பாளாராக உள்ளார் அனிருத்.

இதையும் படியுங்கள்... அஜித்தின் வெற்றியை ஆன்தம் வெளியிட்டு கொண்டாடிய விடாமுயற்சி டீம்!

34
விமர்சகர் அனிருத்

அனிருத் படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, வெவ்வேறு நாடுகளுக்கு சென்று அங்கு இசை நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இவர் இசையமைக்கு படங்களின் இறுதிக்கட்ட பணிகளை முடித்ததும் அப்படத்தை பார்த்து, அதற்கான விமர்சனத்தையும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அனிருத். அவரின் கணிப்பு பெரும்பாலும் மிஸ் ஆனதில்லை. அந்த வகையில் தற்போது அஜித்தின் விடாமுயற்சி படம் பார்த்த பின்னர் அனிருத் என்ன ட்வீட் செய்யப்போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர்.

44
ரெஜினாவுக்கு உம்மா

இந்த நேரத்தில் அவர் படம் பார்த்த பின் போட்டதாக குறிப்பிட்டு ஒரு ட்வீட் வைரலானது. அந்த ட்வீட்டுக்கு கீழ் விடாமுயற்சி பட நடிகை ரெஜினா கமெண்ட் செய்திருக்க, அவருக்கு ‘உம்மா’ என ரிப்ளையும் கொடுக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் அனிருத் தான் ரெஜினாவுக்கு உம்மா கொடுத்ததாக கருதி அந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைரலாக்கினர். ஆனால் உண்மையில் அது அனிருத் பெயரில் இயங்கி வரும் போலி எக்ஸ் தள கணக்கில் இருந்து போடப்பட்ட பதிவாகும். அனிருத் இதுவரை விடாமுயற்சி பற்றி எந்த ஒரு ட்வீட்டையும் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விடாமுயற்சியை விரட்டி வரும் படங்கள் என்னென்ன? இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் மூவீஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories