
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் 200க்கும் அதிகமான படங்கள் திரைக்கு வருவது வழக்கம். கடந்த 2024 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 220 தமிழ் மூவிஸ் திரையில் வெளியானது. இது தவிர நேரடியாக ஓடிடிக்கு வந்த படங்களும் உண்டு. இதில், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த டாப் 10 படங்களின் பட்டியலில் கோட், அமரன், வேட்டையன், மகாராஜா, இந்தியன் 2, ராயன், அரண்மனை 4, கங்குவா, டிமாண்டி காலனி 2, அயலான் ஆகிய படங்கள் இடம் பெற்றன.
இப்போது 2025 பிறந்து ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் வந்துவிட்டது. அதன்படி கடந்த மாதம் திரைக்கு வந்த 20 படங்களில் மத கஜ ராஜா, குடும்பஸ்தன், காதலிக்க நேரமில்லை மற்றும் வணங்கான் ஆகிய படங்கள் மட்டுமே அதிக வசூல் குவித்த படங்களாக அமைந்துள்ளன. இந்த நிலையில் தான் பிப்ரவரி மாதம் அஜித்தின் விடாமுயற்சி முதல் ஆதியின் சபதம் வரையில் 10 தமிழ் படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. இது தவிர மற்ற மொழி படங்களும் இந்த பட்டியலில் இடம் பெறலாம். மேலும், இந்த மாதம் திரைக்கு வரும் படங்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கலாம்.
இந்த நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படமானது முதல் படமாக நாளை 6ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் முதல் தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் வரையில் 7 தென்னிந்திய படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. அதில் நாக சைதன்யாவின் தண்டேல், சந்தீப் கிஷனின் மசாகா படங்களும் இடம் பெற்றன.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கஸாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் பலரது நடிப்பில் திரைக்கு வரும் ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் விடாமுயற்சி. ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாக இந்தியா முழுவதும் அட்வான்ஸ் புக்கிங் மூலமாக ரூ.15 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. வெளியீட்டிற்கு பிறகு ஓடிடி தளத்தில் வெளியிடும் உரிமையை ரூ.100 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.
இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் உருவான படம் தான் தண்டேல். ரொமாண்டிக் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களை மையப்படுத்தி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. அதாவது, ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் கடல் பகுதிக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள். அதன் பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது, மீண்டும் திரும்பி வந்தார்களா போன்ற கதைக்கருவை இந்தப் படம் ஆராய்கிறது.
லைலா – பிப்ரவரி 14 ரிலீஸ் (தெலுங்கு)
இயக்குநர் ராம் நாராயணன் இயக்கத்தில் விஷ்வக் சென், அகன்ஷா ஷர்மா ஆகியோரது நடிப்பில் உருவான படம் தான் லைலா. ஆக்ஷன் காமெடி கதையை மையப்படுத்திய இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது. ஹீரோ முதல் முறையாக பெண் வேடமணிந்து கண்களை கவரும் காட்சியை இந்தப் படம் எடுத்துக்காட்டுகிறது.
பிரம்மானந்தம் - பிப்ரவரி 14 ரிலீஸ் (தெலுங்கு)
இயக்குநர் ஆர்விஎஸ் நிகில் இயக்கத்தில் பிரம்மானந்தம், ராஜா கவுதம் ஆகியோர் பலரது நடிப்பில் உருவான படம் தான் பிரம்மானந்தம். பொழுது போக்கு கதையை மையப்படுத்திய இந்தப் படம் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தத்தின் வாழ்க்கையை சித்தரிக்கும் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தில்ரூபா - பிப்ரவரி 14 ரிலீஸ் (தெலுங்கு)
இயக்குநர் விஸ்வ கரண் இயக்கத்தில் கிரண் அப்பாவரம், ருக்ஷார் தில்லான் நடிப்பில் உருவான படம் தான் தில்ரூபா. முழுக்க முழுக்க காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை மையப்படுத்திய படமாக இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
இயக்குநர் திரிநாத ராவ் நக்கினா இயக்கத்தில் சந்தீப் கிஷன், ராவ் ரமேஷ், ரிது வர்மா, அன்ஷூ ஆகியோரது நடிப்பில் உருவான படம் மசாகா. காதல் காட்சிகள் தவிர குடும்ப கதையை தழுவி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், பவிஷ், சதீஷ் ஆகியோர் பலர் நடித்துள்ள படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். புதிய காதல் நகைச்சுவை கதையை மையப்படுத்தி இந்த படம் வெளியாக இருக்கிறது.