பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா விடாமுயற்சி? அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லைகா

First Published | Dec 31, 2024, 7:49 AM IST

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலக அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Vidaamuyarchi

நடிகர் அஜித்தின் 62-வது படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் வில்லனாக ஆரவ், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா கசெண்ட்ரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இப்படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டு உள்ளது.

Ajith Kumar, Trisha

விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்த படக்குழு, அதன் அப்டேட்டுகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். அதன்படி அண்மையில் சாவதீகா என்கிற பாடலை வெளியிட்டனர். அனிருத் இசையில் அந்தோணி தாசன் பாடிய அப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. மறுபுறம் அப்படத்தின் டப்பிங் பணிகளை அஜித் அண்மையில் முடித்த நிலையில், தற்போது பின்னணி இசைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... 'விடாமுயற்சி'யை முடித்த கையேடு 'குட் பேட் அக்லீ' படத்தின் அடுத்த கட்ட பணியில் இறங்கிய அஜித்!

Tap to resize

Vidaamuyarchi Update

விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்த படக்குழு அப்படத்திற்கான வேலைகளையே இன்னும் முழுமையாக முடிக்கவில்லையாம். பொங்கல் ரிலீஸ் ஆக இருந்திருந்தால் அப்படத்தை கடந்த வாரமே சென்சாருக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை படத்தின் பர்ஸ்ட் காப்பியே ரெடியாகாத காரணத்தால் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆவது டவுட்டு தான் என பத்திரிகையாளர் பிஸ்மி கூறி இருக்கிறார்.

Vidaamuyarchi Out of Pongal Race?

அதுமட்டுமின்றி லைகா நிறுவனமும் நிதி நெருக்கடியில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதுவும் இப்படத்தின் ரிலீஸ் தாமதம் ஆவதற்கு காரணம் என அவர் கூறி உள்ளார். இது ஒரு புறம் இருக்க நேற்று லைகா நிறுவனம் வெளியிட்ட விடாமுயற்சி படத்தின் வீடியோ கிளிப்பில் எந்த இடத்திலும் அது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என குறிப்பிடப்படவில்லை. இதனால் விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸில் இருந்து பின்வாங்கி உள்ளதா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது.

Vanangaan

ஒருவேளை விடாமுயற்சி பொங்கல் ரேஸில் இருந்து விலகினால், அது பாலாவின் வணங்கான் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துவிடும். ஏனெனில் விடாமுயற்சிக்கு போட்டியாக ரிலீஸ் ஆகும் நேரடி தமிழ் படம் வணங்கான் மட்டும் தான். அதுதவிர ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள தெலுங்கு படமான கேம் சேஞ்சரும் 2025-ம் ஆண்டு பொங்கல் ரேஸில் களமிறங்க உள்ளது.

இதையும் படியுங்கள்... விடாமுயற்சி சவகீதா என்றால் மலாய், தாய் மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா? ஆண்டனி தாசன் விளக்கம்!

Latest Videos

click me!