குறிப்பாக கமலுக்கு மேக் அப் அலர்ஜி, படப்பிடிப்பில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்து, கொரோனா ஊரடங்கு போன்றவையும் படப்பிடிப்பு மேலும் தாமதமாக காரணமாக அமைந்தது. 'இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே சென்றதால், திடீர் என இயக்குனர் ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சாரணை வைத்து, RC15 படத்தை இயக்க துவங்கினார். எனவே லைக்கா நிறுவனம், இந்தியன் 2 படத்தை முடிக்காமல், மற்ற படத்தை இயக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், பலதரப்பு பிரச்சனைகளுக்கு பின்னர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
மேலும் செய்திகள்: ரத்தம் வரும் அளவிற்கு உதவி இயக்குனரை தாக்கிய சீரியல் நடிகர்... படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு..!