பாரதிராஜாவை பார்க்க சென்றேன்... மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள் - டுவிட்டரில் வைரமுத்து உருக்கம்

Published : Aug 24, 2022, 12:13 PM IST

Bharathiraja : அஜீரனக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் பாரதிராஜாவை கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

PREV
14
பாரதிராஜாவை பார்க்க சென்றேன்... மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள் - டுவிட்டரில் வைரமுத்து உருக்கம்

தமிழில் காலத்தால் அழியாத பல வெற்றிப்படங்களை இயக்கிவர் பாரதிராஜா. இவருக்கு தற்போது வயதாகிவிட்டதால், படம் இயக்குவதை தவிர்த்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பாண்டியநாடு, ராக்கி, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தினார் பாரதிராஜா.

24

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்திருந்தார் பாரதிராஜா. மித்ரன் ஆர் ஜவகர் இயக்கிய இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு தாத்தாவாக நடித்து இருந்தார் பாரதிராஜா. அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அப்படத்தில் காமெடி, எமோஷனல் என இரண்டிலும் கலக்கி உள்ளார் பாரதிராஜா.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக களமிறங்கும் கிளாமர் குயின்ஸ்... அந்த 2 கவர்ச்சி நாயகிகள் யார் தெரியுமா?

34

இதனிடையே அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அஜீரனக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், பாரதிராஜாவை மருத்துவமனையில் சந்தித்த கவிஞர் வைரமுத்து, அவர் குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

44

அந்த பதிவில், “பாரதிராஜா மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன். நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்னச் சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்ய சுத்த மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள். அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார் கலையுலகை ஆண்டு வருவார்” என வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... உள்நாட்டு சுற்றுப்பயணத்தை துவங்கிய சீயான்..எதற்காக தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories