பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக களமிறங்கும் கிளாமர் குயின்ஸ்... அந்த 2 கவர்ச்சி நாயகிகள் யார் தெரியுமா?

First Published | Aug 24, 2022, 11:21 AM IST

BiggBoss Tamil 6: விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்க உள்ளதால் அதில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக 5 சீசன்கள் முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆனதற்கு முக்கிய காரணம் கமல் ஹாசன் தான். அவர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதுவரை முடிந்துள்ள 5 சீசன்களில் முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார். இதையடுத்து இரண்டாவது சீசனில் ரித்விதாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர் ஆனதோடு ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் வென்றனர்.

இதையும் படியுங்கள்... ரக்சன் - ராஜலட்சுமியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் 3 முக்கிய பிரபலங்கள்? லேட்டஸ்ட் அப்டேட்..!

Tap to resize

விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி தொடங்க இன்னும் 40 நாட்களே உள்ளதால் தற்போது அதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஷில்பா மஞ்சுநாத், தர்ஷா குப்தா

ஏற்கனவே ரக்‌ஷன், ராஜலட்சுமி, கார்த்திக் குமார், அஜ்மல், ஸ்ரீநிதி ஆகியோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது மேலும் 2 நடிகைகள் குறித்த தகவல் லீக் ஆகி உள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை பாடாய்படுத்தி வரும் நடிகைகள் தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் பிக்பாஸ் 6-ல் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் பட்டியலில் சர்ச்சை நடிகை? எப்போது துவங்குகிறது நிகழ்ச்சி... பரபரப்பு தகவல்!

Latest Videos

click me!