இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகிறது. விஜய் தேவரகொண்டா கெரியரில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இதுவாகும். இப்படத்தின் மொத்த பட்ஜெட் மட்டும் ரூ.90 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் தேவரகொண்டா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.