தியேட்டர்ல கதறவிட்டது பத்தாதுனு இப்போ ஓடிடில வேறயா! இந்தியன் 2 படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

First Published | Aug 4, 2024, 1:42 PM IST

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இந்தியன் 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

indian 2

ஷங்கர் இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்களுள் ஒன்று இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பான் இந்தியா அளவில் ஹிட் அடித்தது. இப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தியன் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்களும், பின்னணி இசையும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி ஒரு வியத்தகு படத்தை கொடுத்த இயக்குனர் ஷங்கர் சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார்.

Indian 2 Kamal

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் உடன் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். முதல் பாகத்தை போல் அதன் இரண்டாம் பாகமும் மாபெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி ரிலீஸ் ஆனது. 

இதையும் படியுங்கள்... காத்திருந்த பீஸ்ட் வில்லன்; கழட்டிவிட்டு சென்ற காதலி... பாதியில் நின்றுபோன ஷைன் டாம் சாக்கோவின் 2வது திருமணம்!

Tap to resize

Indian 2 OTT Release

கமலின் கெரியரில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம், மோசமான திரைக்கதையால் அட்டர் பிளாப் ஆனது. ரிலீஸ் ஆன முதல் வாரத்திலேயே தியேட்டர்கள் காத்துவாங்க தொடங்கின. சுமார் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்க வசூல் மூலம் வெறும் ரூ.142 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. இந்த ஆண்டின் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்த இந்தியன் 2 தற்போது ஓடிடி ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

Indian 2 OTT Release Date announced

இந்தியன் 2 படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதன் ஓடிடி ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ஆகஸ்ட் 9-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்தியன் 2 ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுவும் தாத்தா வராரு கதறவிடப் போறாரு என்கிற டேக் லைன் உடன் அந்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் தியேட்டரில் கதறவிட்டது பத்தாதுனு இப்போ ஓடிடில வேறயா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... எதுக்கு வம்பு... இளையராஜாவிடம் சரண்டர் ஆன மஞ்சும்மல் பாய்ஸ்! ஒரு பாட்டுக்காக இசைஞானி இத்தனை கோடி கேட்டாரா?

Latest Videos

click me!