காத்திருந்த பீஸ்ட் வில்லன்; கழட்டிவிட்டு சென்ற காதலி... பாதியில் நின்றுபோன ஷைன் டாம் சாக்கோவின் 2வது திருமணம்!

First Published | Aug 4, 2024, 1:05 PM IST

விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் இரண்டாவது திருமணம் பாதியில் நின்றுபோனது.

shine tom chacko

தமிழில் விஜய் சேதுபதி போல், மலையாள திரையுலகில் எந்த வித கேரக்டர் கிடைத்தாலும் அதை அசால்டாக செய்து அப்ளாஸ் வாங்குபவர் தான் ஷைன் டாம் சாக்கோ. இவர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனார். அப்படத்தில் வில்லனாக மிரட்டிய ஷைன் டாம் சாக்கோ, கடந்தாண்டு தீபாவளி விருந்தாக வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

shine tom chacko lover

பிசியான நடிகராக வலம் வரும் இவர், சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. அந்த வகையில் நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த பின்னர் அவரையே விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல், மம்முட்டியோடு ஒப்பிடுகையில் விஜய் ஒன்னும் பெரிய நடிகரில்லை, அவர்கள் அளவுக்கு நடிப்பதுமில்லை. இருப்பினும் அவருக்கே அதிக தொகை சம்பளமாக கொடுக்கப்படுவது ஏன் என ஷைன் டாம் சாக்கோ பேட்டி ஒன்றில் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

Tap to resize

shine tom chacko, thanuja

இதைத் தொடர்ந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ தபீதா மேத்யூஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்த ஷைன் டாம் சாக்கோ கடந்த ஜனவரி மாதம் தனது இரண்டாவது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்...  எதுக்கு வம்பு... இளையராஜாவிடம் சரண்டர் ஆன மஞ்சும்மல் பாய்ஸ்! ஒரு பாட்டுக்காக இசைஞானி இத்தனை கோடி கேட்டாரா?

shine tom chacko second marriage

அதன்படி தனது நீண்ட நாள் காதலியான தனுஜாவை கரம்பிடிக்க உள்ளதாக அறிவித்த அவர், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் தனுஜா - ஷைன் டாம் சாக்கோ ஜோடியின் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. நிச்சயம் முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் திருமணம் பற்றி எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்த ஷைன் டாம் சாக்கோ திடீரென தனது காதலியின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கினார்.

shine tom chacko second marriage stopped

இதனால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக பேச்சு அடிபட்ட நிலையில், ஷைன் டாம் சாக்கோவும் அதை உறுதி செய்துள்ளார். தற்போது தான் சிங்கிளாக இருப்பதாக கூறியுள்ள அவர், உண்மையான அன்பு வைத்திருந்தும் அந்த உறவை தன்னால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை என வருத்தத்துடன் கூறி இருக்கிறார். மீண்டும் டேட்டிங் ஆப் மூலம் பெண் தேடும் வேட்டையில் இறங்க உள்ளதாகவும் அறிவித்துள்ள அவர், பிடித்தமான பெண் கிடைத்தாலும் அவரை கன்வின்ஸ் செய்வது சவாலானதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... De aging பண்ண சொன்னா.. Chai வாலாவை வச்சி டூப் போட்ருக்காங்கப்பா... விஜய்யின் யங் லுக்கை கலாய்த்த பிரபலம்

Latest Videos

click me!