'இந்தியன்' படம் இவரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதையா? கமல்ஹாசனுக்கு சென்றது எப்படி!

First Published | Oct 24, 2020, 7:23 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்1996ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய சாதனை படைத்த படம் தான் இந்தியன். 
 

இந்த படம் இயக்குனர் சங்கர் கைவண்ணத்தில் பிரமாண்டமாக திரைக்கு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
24ஆண்டுகள் கழித்து, இந்தியன்2 படத்தினை ரசிகர்களுக்கு கொடுக்கும் முயற்சியில் கமல் மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இருவரும் கை கோர்த்து இறங்கியுள்ளனர்.
Tap to resize

இதுகுறித்த தகவலை கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகும் நாளில், பிக்பாஸ் மேடையிலேயே அறிவித்தார் கமல்.
இதுகுறித்த தகவலை கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகும் நாளில், பிக்பாஸ் மேடையிலேயே அறிவித்தார் கமல்.
பின்னர் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ், காரணமாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் நடைபெறாமல் உள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் யாருக்காக எழுதினர் என்கிற தகவல் வெளியே கசிந்துள்ளது.
அதாவது முதலில் நவரச நாயகன் கார்த்திக்கை மனதில் வைத்து தான் சங்கர் இந்த கதையை எழுதியுள்ளார். பின்னர் எதேர்ச்சியாக கமலிடம் இந்த கதையை கூற அவருக்கு மிகவும் பிடித்து விட்டதால் இந்த படத்தில் கமலஹாசனை நடிக்க வைத்து இயக்கி மிகப்பெரிய ஹிட்டையும் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!