ஒத்திகை பார்த்து சுரேஷை திட்டிய சனம்..! உண்மை உடைந்ததால் அதிர்ச்சியில் போட்டியாளர்கள்..!

First Published | Oct 24, 2020, 5:24 PM IST

இன்றைய தினம் கண்டிப்பாக கமல், போட்டியாளர்கள் முன்னிலையில் தோன்றி, கடந்த மூன்று நாட்களுக்கு முன் நடந்த சுரேஷ் - சனம் பிரச்சனை பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மக்களும், ரசிகர்களும் நினைத்தது போலவே இன்று தன்னுடைய பணியை செம்மையாக செய்துள்ளார்.
 

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் கூறியுள்ளதாவது...
எல்லோருக்கும் தெரியும் இன்று நான் எதை பற்றி பேச போகிறேன் என்று. வன்முறை தவறு தான் என்பதையும் கமல் கூறுகிறார்.
Tap to resize

பின்னர் சனம் பக்கம் நியாயம் இருக்கு என்று நினைப்பவர்கள் கைகளை உயர்த்துமாறு கூறியதும், போட்டியாளர்கள் 90 சதவீதம் பேர் சனத்திற்கு சப்போர்ட் செய்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து பேசும் கமல், சனத்தின் ரியாக்ஷன் கூட தெரியாமல் வந்ததா என்பதிலும் தனக்கு ஒரு சந்தேகம் உள்ளது என்றும், காரணம் வேல்முருகனிடம் ஒரு முறை ஒத்திகை பார்த்து விட்டதாகவும் தெரிவிக்கிறார்.
இதை கேட்டு சனம் மட்டும் அல்ல ஒட்டு மொத்த போட்டியாளர்களும் அதிர்ச்சியடைகிறார்கள்.
முன்பு ஒருமுறை சனம் தன்னிடம், மீண்டும் சுரேஷ் வம்பு பண்ணினாள் நான் வயதுக்கு கூட மரியாதை கொடுக்க மாட்டேன் என கூறி இருந்தார் அது நிஜமாகி விட்டது என்று வேல்முருகன் சொல்கிறார்.
இதை தான் நாளும் சொல்கிறேன் வயதுக்காக பார்க்கிறேன் என்கிற இங்கீதத்தை இழந்துவிட்டார் என கூறுகிறார்.
இதன் பின் என்ன நடக்கும் என்கிற எதிர் பார்புகளுடன் இந்த புரோமோ முடிவடைந்துள்ளது.

Latest Videos

click me!