Independence Day 2022 : 75-வது சுதந்திர தின ஸ்பெஷல்!சுதந்திர திருநாளில்...தேசபக்தியை உணர்த்தும் படங்களில் சில

First Published Aug 15, 2022, 1:33 PM IST

75 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பான தருணத்தில் தேசபக்தியை மையமாக கொண்டு ரசிகர்களை கவர்ந்த படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்..

Thuppakki

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்திருந்த துப்பாக்கி படம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தில் ஸ்நிப்பர் செல்ஸ் எனப்படும் தீவிரவாத கும்பலை ஒடுக்கும் இராணுவ வீரராக விஜய் மாஸ் காட்டி இருப்பார். ஹரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இதையும் படியுங்கள்... இன்னும் ஒரு வருஷமா! பிரபாஸின் ‘சலார்’ படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த KGF இயக்குனர்... ஷாக்கான ரசிகர்கள்

மதராசப்பட்டினம் (Madrasapattinam)

Soori : வீடு துடைக்கும் மாப் குச்சியில் தேசியக் கொடியை கட்டி பறக்க விட்ட சூரி... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்சுதந்திரம் பெறுவதற்கு முன் நடைபெற்ற கதைக்களத்தை அம்சமாக கொண்டு வெளியாகி இருந்தது மதராசபட்டினம். இந்த படத்தின் மூலம் ஹாலிவுட் நாயகி எமி ஜாக்சன் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்திருந்தார். சென்னையில் ஒரு காதல் கதையை மிக அழகாக காட்டியிருந்தது இந்த படம்.

மேலும் செய்திகளுக்கு....Soori : வீடு துடைக்கும் மாப் குச்சியில் தேசியக் கொடியை கட்டி பறக்க விட்ட சூரி... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

mudhalvan

1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான முதல்வன் படத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா மற்றும்  வடிவேல் உள்ளிட்ட பலர்  நடித்திருந்தனர். ஷங்கர் இயக்கி இருந்த இந்த படம் ஒரு நாள் முதல்வர் என்னும்  கதைக்களத்தை மையமாகக் கொண்டு வெளியாக இருந்த இந்த படம் அரசியலின் இன்னொரு பக்கத்தை காட்டியிருந்தது. அதோட தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம்பேர் விருது இது பெற்று இருந்தது

பாம்பே (Bombay)

மதக்கலவரத்தால் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது பாம்பே திரைப்படம். இந்த படத்தில் அரவிந்த்சாமியும், மனிஷா கொய்ராலாவும்  முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.  இயக்குனர் மணிரத்தினம் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்த படம் பில்ம்பேர் விருது தேசிய திரைப்பட விருதுகளை வென்று இருந்தது.

ரோஜா (Roja)

காதலையும் தேசபக்தியையும் ஒன்றாக சேர்த்து சொன்ன படம் தான் ரோஜா. 1992 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார். அரவிந்த்சாமி மதுபாலா, ஜனகராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அறிமுகமான ரோஜா படத்தில் நாயகன் தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொள்ளும் கதைகளத்தை மையமாக கொண்டிருந்தது.  இந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றெடுத்தது.

Indian

கமலஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் என ஒட்டுமொத்த நட்சத்திர பட்டாளமே கலக்கி இருந்த இந்தியன் 2 திரைப்படம் சங்கரின் இயக்கத்தில் திரை உலகை கலக்கியிருந்தது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்  சுபாஷ் சந்திர போஸ் இறந்து விட்டதாக அன்றைய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் சாகவில்லை என்று நம்பப்பட்டது. அந்த கதையை பின்புலமாக கொண்டே இந்தியன் கிளைமாக்ஸை சங்கர் வடிவமைத்திருந்தார்.

click me!