நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக விசாகப்பட்டினத்தின் துறைமுக பகுதியில், விஜய்யின் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், அஜித் 'வலிமை' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் ஏகே 61வது படத்தின் படப்பிடிப்பு, நாளை முதல் விசாகப்பட்டினத்தில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
விசாகப்பட்டினத்தில் நாளை முதல் துவங்க உள்ள படப்பிடிப்பில், அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொள்ள உள்ளாராம். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.