தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இதனால் இவரை செல்லமாக பரோட்டா சூரி என்றே அழைக்கின்றனர். இதன்பின் அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பாப்புலர் ஆனார் சூரி.
இதுவரை காமெடி வேடங்களில் மட்டும் நடித்து வந்த சூரி தற்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சூரி. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அனைவரும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பலரும் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சூரியும் தனது வீட்டில் தேசியக் கொடியை குச்சியில் கட்டி பறக்கவிட்டு அதனருகே நின்று போட்டோ எடுத்து பதிவிட்டார்.
சூரியின் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர். ஏனெனில், அவர் வீடு துடைக்க பயன்படுத்தப்படும் மாப் குச்சியில் தேசிய கொடியை கட்டி பறக்க விட்டுள்ளார். அவரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலரோ அது மாப் குச்சி அல்ல, கடைகளில் தேசியக்கொடியே அவ்வாறு விற்கப்படுகிறது என கூற, அந்த குச்சியின் நுனியில் இருக்கும் பிளாஸ்டிக்கை சுட்டிக்காட்டி இது மாப் குச்சி தான் என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தனுஷின் நியூ லுக்குடன் திருச்சிற்றம்பலம் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு