
மிகச் சில நாயகிகள் மட்டுமே ஒரே இரவில் புகழின் உச்சியை அடைகிறார்கள். முதல் படமே மிகப்பெரிய வெற்றிபெறும். அப்படிப்பட்ட ஒரு அதிஷ்டக்கார நாயகியைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமே வெற்றி பெற்றது. இரண்டாவது படமோ இண்டஸ்ட்ரி ஹிட். முன்னணி நாயகன் நடித்த அந்தப் படம் சாதனை படைத்தது. அந்தப் படத்தின் மூலம் அவர் முன்னணி நாயகிகள் பட்டியலில் இணைந்தார். தென்னிந்திய திரையுலகில் அனைத்து முன்னணி நாயகர்களுடனும் நடித்தார். டோலிவுட்டில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நாயகி என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.
அவர் வேறு யாருமல்ல, இலியானா டி குரூஸ் தான். கோவாவைச் சேர்ந்த இந்த அழகியை இயக்குனர் YVS சௌதரி திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். 2006 ஆம் ஆண்டு ராம் போத்தினேனி நாயகனாக நடித்த 'தேவதாசு' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே ஆண்டு, போக்கிரி படத்தின் மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தார். இரண்டாவது படத்திலேயே மகேஷ் பாபு போன்ற ஒரு முன்னணி நாயகனுடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.
போக்கிரி இண்டஸ்ட்ரி ஹிட். இயக்குனர் பூரி ஜெகந்நாத் இந்த படத்தை இயக்கியிருந்தார். இலியானாவை ஒரு மாடர்ன் தேவதையாக காட்டி இருந்தார். இந்தப் படத்திற்குப் பிறகு இளசுகளின் கனவு கன்னியாக இலியானா மாறினார். மிக குறுகிய காதில் NTR, பிரபாஸ், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'நண்பன்' படத்தில் நடித்திருந்தார். டோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாக மாறிய பின்னர், தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகளை நிராகரித்தார். இதுவே இவர் அதிக தமிழ் படங்கள் நடிக்காமல் போக காரணமாக அமைந்தது.
கீர்த்தி சுரேஷ் மீது ஏற்பட்ட காதல்! குடும்பத்தோடு பெண் கேட்டு சென்று பல்பு வாங்கிய 47 வயது நடிகர்!
தனது திரைவாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது, பாலிவுட்டிற்குச் சென்ற இலியானா. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவருடன் காதல் கொண்டார். சில வருடத்தில் அவருடன் பிரேக் அப் செய்து பிரிந்தார். இந்த பிரிவின் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளானார். தமிழ் மற்றும் தெலுங்கு இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தாலும், இந்தி திரையுலகம் ஏமாற்றத்தையே கொடுத்தது.
அவ்வப்போது சில இந்தி படங்களில், முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மறுபுறம், தென்னிந்திய திரையுலகம் இலியானாவை முற்றிலும் மறந்துவிட்டது. இதற்கிடையில், இலியானா திருமணமாகாமலேயே கடந்த 2023-ஆம் ஆண்டு தாயானார்.
தான் கர்ப்பமாக இருப்பதை சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்தார். நீண்ட காலமாக சஸ்பென்ஸில் வைத்திருந்தார். இலியானாவுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. இலியானா கர்ப்பமான பின்னரே கணவர் மைக்கேல் டோலனை திருமணம் செய்து கொண்டார்.
ஆப்பாக மாறிய ஆசை! 40 வயசாகியும் திருமணம் செய்து கொள்ளாத ஷங்கர் பட ஹீரோயினா இது?
தென்னிந்தியாவில் இருந்திருக்க வேண்டிய இலியானா, தேவையில்லாமல் இந்தி திரையுலகிற்குச் சென்று தனது திரைவாழ்க்கையை சீரழித்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் இலியானா நடிக்கிறார். தெலுங்கில் இலியானா நடித்த கடைசிப் படம் அமர் அக்பர் அந்தோணி. இயக்குனர் ஸ்ரீனு வைட்டலா இயக்கிய இந்தப் படம் தோல்வியடைந்தது. அந்தப் படத்தின் தோல்வியால் இலியானாவுக்குத் தெலுங்கில் வாய்ப்புகள் குறைந்தன. இலியானாவுக்கு பெரிதாக டோலிவுட்டை கண்டுகொள்ளாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.