போட்டோ எடுக்க வந்த ஹீரோயின்; சண்டை போட்டுக்கொண்ட ‘ரஜினி - இளையராஜா’!

Published : Dec 03, 2024, 12:40 PM IST

Rajinikanth Meet Ilaiyaraaja : இசைஞானி இளையராஜாவை சந்திக்க சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது ஸ்டூடியோவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் அவருடன் செல்ல சண்டை போட்டிருக்கிறார்.

PREV
14
போட்டோ எடுக்க வந்த ஹீரோயின்; சண்டை போட்டுக்கொண்ட ‘ரஜினி - இளையராஜா’!
Rajinikanth Meet Ilaiyaraaja

ரஜினிகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பாலச்சந்தர், பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன் என ஏராளமான இயக்குனர்கள் உதவி இருந்தாலும் அவரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய மற்றொரு பிரபலமும் இருக்கிறார். அவர் தான் இளையராஜா. ஏனெனில் ரஜினி நடித்த ஏராளமான படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி ரஜினி படத்தில் இடம்பெற்ற பல எவர்கிரீன் ஹிட் பாடல்கள் எல்லாம் ராஜாவின் இசையில் தான் வந்தது.

24
Ilaiyaraaja

இருப்பினும் ஒரு மேடையில் இளையராஜாவிடம் அவர் தன்னைவிட கமல் படங்களுக்கு தான் நல்ல நல்ல பாடல்களை கொடுத்திருப்பதாக வெளிப்படையாகவே கூறியதோடு, தன்னுடன் அவர் பணியாற்றிய கடைசி படமான வீரா படத்தின் பாடல்களை எல்லாம் கார்த்திக் ராஜா தான் இசையமைத்தார் என்றும் ஓப்பனாக கூறி இருந்தார். இப்படி சந்திக்கும் போதெல்லாம் செல்லமாக சண்டையிட்டுக் கொள்வதை இருவரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்... இன்று 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் தமிழ் ஹீரோஸின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

34
ilaiyaraaja, Rajini

அப்படி ஒரு செல்ல சண்டையுடன் கூடிய சந்திப்பு தான் அண்மையில் நடந்திருக்கிறது. அந்த வகையில் இளையராஜாவை சந்திக்க சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது ஸ்டூடியோவிற்கு வருகை தந்திருக்கிறார் ரஜினி. அப்போது அங்கு தினசரி பட கம்போசிங் நடைபெற்றிருக்கிறது. அந்த படத்தில் நாயகியாக நடிக்கும் வெளிநாட்டு பெண்ணான சிந்தியா லூர்து என்பவர் தான் அப்படத்தை தயாரித்தும் வருகிறார் என்பதால் அவர் பாடல் கம்போசிங்கின் போது இளையராஜா ஸ்டூடியோவில் இருந்துள்ளார்.

44
Dinasari Movie Hero Srikanth and Heroine cindhiya

அந்த சமயத்தில் ரஜினிகாந்த் இளையராஜாவை பார்க்க வந்ததை அறிந்த சிந்தியா அவர்கள் இருவருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டு கேட்டிருக்கிறார். அப்போது ரஜினிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக அவரை நடுவில் நிற்குமாறு இளையராஜா சொல்ல, ஆனால் ரஜினியோ, ராஜா சாருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக நீங்கள் இருவரும் அருகில் நில்லுங்கள் என சொல்ல, இருவரும் சில வினாடிகள் செல்ல சண்டை போட்டு இறுதியாக அருகருகே நின்றபடி நடிகை சிந்தியாவுடன் போட்டோ எடுத்துள்ளனர். அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... புஷ்பா 2 படத்தால் பங்குச் சந்தையில் சில நொடிகளில் கொட்டிய 426 கோடி!! காரணம் இதுதான்!!

Read more Photos on
click me!

Recommended Stories