மும்பையைச் சேர்ந்த நடிகை இலியானா, தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தன்னுடைய திரைப்பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர். அந்த வகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு, தேவதாசு என்கிற திரைப்படத்தில் ராம் பொதேனிக்கு ஜோடியாக நடிகர். இந்தப் படம் தான் ராமுக்கும் அறிமுகப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார் இலியானா. இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தமிழில் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இலியானாவுக்கு வலை விரித்த நிலையில், ஹிந்தி திரையுலகில் அம்மணியின் ஆதிக்கம் சென்று விட்டதால், ஏற்றி விட்ட ஏணியான தெலுங்கு திரையுலகிற்கே குட் -பை சொல்லிவிட்டு முழு நேர பாலிவுட் நடிகையாக மாறினார்.
Ileana DCruz
இந்த காதல் முறிவுக்கு பின்னர் நடிகை கத்ரீனா கைஃப் சகோதரர் செபஸ்டியனை இலியானா காதலித்து வருவதாக கூறப்பட்டது . மேலும் இருவரும் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு டேட்டிங் சென்று வருவதோடு, லிவிங் டூ கெதர் வாழ்க்கையிலும் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள் என கூறப்பட்ட போதிலும், இலியானா இதுவரை இதுகுறித்து வாய் திறக்கவில்லை.
Ileana DCruz
தற்போது தன்னுடைய கர்ப்ப காலத்தை சந்தோஷமாக அனுபவித்து வரும் இலியானா, முதல்முறையாக பெரிதாக இருக்கும் வயிறுடன் கருப்பு நிற டைட் உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.