30 வருஷத்துக்கு முன் செஞ்ச ஒரு விஷயம்! மீண்டும் தூசிதட்டி எடுக்கும் இளையராஜா- ரஜினியுடன் நடக்கும் சைலன்ட் டீல்

Ganesh A   | Asianet News
Published : Dec 27, 2021, 03:24 PM IST

தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இசை ராஜ்ஜியம் நடத்தி வரும் இளையராஜா (Ilaiyaraaja), சைலன்டாக ரஜினியுடன் முக்கிய டீல் ஒன்றை பேசி வருகிறாராம்.

PREV
16
30 வருஷத்துக்கு முன் செஞ்ச ஒரு விஷயம்! மீண்டும் தூசிதட்டி எடுக்கும் இளையராஜா- ரஜினியுடன் நடக்கும் சைலன்ட் டீல்

இளையராஜாவின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். காதல், சோகம், வேதனை, துக்கம் போன்ற பலரது கவலைகளை மறக்க வைப்பது ராஜாவின் இசை தான். அதே போல், பலரது இரவு நேர தாலாட்டும் ராஜாவின் இசை என்றே கூறலாம். 

26

இவரது இசைக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் ராஜ்ஜியம் நடத்தி வரும் இளையராஜா, தமிழில், கீதாஞ்சலி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, கொக்கரக்கோ, ராஜாதி ராஜா, சிங்காரவேலன் உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.

36

பாவலர் கிரியேஷன்ஸ் என்கிற நிறுவனம் சார்பில் திரைப்படங்களைத் தயாரித்து வந்த இளையராஜா (Ilaiyaraaja), இசைப்பணிகளில் கவனம் செலுத்தி வந்ததால், கடந்த 30 ஆண்டுகளாக படம் தயாரிக்காமல் இருந்து வந்தார். 

46

இந்நிலையில், தற்போது மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்க முடிவு செய்துள்ளாராம் இளையராஜா. இதற்காக அவர் ரஜினியுடன் (Rajini) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். 

56

மேலும் இப்படத்தை தனது அபிமான இயக்குனரான பால்கியை (Balki) இயக்க வைக்கவும் இளையராஜா திட்டமிட்டுள்ளாராம். அதேவேளையில் பால்கி சொன்ன கதையும் ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போனதாம். 
 

66

ஆதலால் விரைவில் இளையராஜா (Ilaiyaraaja) தயாரிப்பில் பால்கி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஒரு திரைப்படம் தயாராக உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories