நீங்கள் முட்டாள்களா? குடும்பத்தை கெடுத்த அன்னபூரணியின் ஆதிபராசக்தி அவதாரத்தால் கடுப்பான லட்சுமி ராமகிருஷ்ணன்!

Published : Dec 27, 2021, 02:08 PM IST

திருமணம் ஆன ஒருவருடன் தொடர்பு வைத்து கொண்டு, ஒரு குடும்பத்தை கெடுத்த அன்னபூரணி தற்போது தன்னை ஆதி பராசக்தியின் அவதாரம் என கூறி வரும் வீடியோக்களை பார்த்து கடுப்பான, பிரபல நடிகையும், இயக்குனருமான, லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல ஊடகம் ஒன்றிற்கு கொடுத்துள்ள பேட்டியில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.  

PREV
18
நீங்கள் முட்டாள்களா? குடும்பத்தை கெடுத்த அன்னபூரணியின் ஆதிபராசக்தி அவதாரத்தால் கடுப்பான லட்சுமி ராமகிருஷ்ணன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிகழ்ச்சியை முதலில் தொகுத்து வழங்கி வந்தவர் நிர்மலா பெரியசாமி. இவரை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

 

28

இந்த நிகழ்ச்சி மூலம், பல கொலை சம்பவங்கள் கூட வெளியே வந்துள்ளது. அதே போல் முறை தவறிய உறவுகள் குறித்த தகவல்களையும் விலாவாரியாக பேசியதால் பல குடும்பங்கள் பிரிந்தும் உள்ளது.

 

38

இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கியபோது, கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் ஆகி இரண்டு குழந்தை உள்ள ஒருவருடன் முறைதவறிய உறவில் இருந்ததற்காக சிக்கியவர் அன்னபூரணி.   அவர் தன் கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும். இன்னொரு பெண்ணின் கணவருடன் தான் நிரந்தரமாக வாழ வேண்டும் என்றும் தனக்கு நியாயம் வேண்டும் என கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

48

இந்நிலையில் அன்னபூரணி அரசு அம்மா என்கிற பேஸ்புக் அக்கவுண்ட்டில் வழியாக தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பொதுமக்கள் பக்தி பரவசத்தில், பூஜை செய்யும் வீடியோக்கள் சில வெளியாகி வைரலாகி நேற்று முதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

58

இந்த வீடியோவில் தன்னைத் தானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளும் அன்னபூரணி, அவரது காலில் விழுந்து மக்களும் ஆசி வாங்கிச் செல்கிறார்கள். அன்னபூரணியும் அவர்களை ஆசீர்வதிக்கிறார். அன்னபூரணியின் அருளாசிகள் ஒரு பக்கம் வைரலாகி வர, சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி இவற்றை பார்த்து செம்ம காண்டாக தன்னுடைய கருத்தை ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

 

68

அன்னபூரணியின் ஆதிபராசக்தி அவதாரம் குறித்த வீடியோக்களை பலர் எனக்கு அனுப்பினர்,  வீடியோக்களையெல்லாம் பார்த்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. அதேசமயம், மக்கள் முட்டாள்களா? ஏமாந்துப் போய் அவரது காலில் விழுவது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.

 

78

அன்னபூரணியின் கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியோ, அவரின் நடத்தைக் குறித்தோ நான் எதையும் விவாதிக்க விரும்பவில்லை. அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அதுகுறித்துப் பேசுவது சரி கிடையாது. ஆனால், இந்த மாதிரி தன்னை சாமி என்று சொல்லிக்கொண்டு மக்களை காலில் விழவைத்து மிகவும் தவறானது, படு முட்டாள்தனம் என கூறி பரபரப்பாக தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

88

முறை தவறி ஒருவருடன் இருந்து ஒரு குடும்பத்தை கெடுத்த அன்னபூரணியின் ஆதிபராசக்தியின் அவதாரம் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதோடு, மீம்ஸுகளும் அதிகம் உலா வர துவங்கியுள்ளது.

 

click me!

Recommended Stories