சீட் கொடுக்காத காலேஜ்.. ஹீரோயினியாக மாஸ் என்ட்ரி கொடுத்த மீனாட்சி..

Kanmani P   | Asianet News
Published : Dec 27, 2021, 03:14 PM IST

தனக்கு சீட் கொடுக்க மறுத்த கல்லூரியில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த நடிகை மீனாட்சி மாஸ் காட்டியுள்ளார்.

PREV
18
சீட் கொடுக்காத காலேஜ்.. ஹீரோயினியாக மாஸ் என்ட்ரி கொடுத்த மீனாட்சி..
Meenakshi Govindarajan

Meenakshi Govindarajan : தமிழ் திரையுலகில் 2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட " வில்லா டு வில்லேஜ் " என்னும் ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று திரையுலகில் அறிமுகமானவர் மீனாட்சி கோவிந்தராஜன்.

28
Meenakshi Govindarajan

Meenakshi Govindarajan :  இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் பெற்ற பிரபலத்தினை தொடர்ந்து மீனாக்ஷி கோவிந்தராஜன் அதே ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிரபல மெகா தொடரான  "சரவணன் மீனாட்சி" என்னும் தொடரில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

38
Meenakshi Govindarajan

Meenakshi Govindarajan : தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடரில் நடித்து தமிழ் திரையுலக ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ள இவர், பின்னர் 2019ம் ஆண்டு தமிழில் வெளியான "கென்னடி கிளப்" என்னும் திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்.

48
Meenakshi Govindarajan

Meenakshi Govindarajan : ஸ்கை பிலிம் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் நாயகனாக நடிக்கும் படம் வேலன்.

58
Meenakshi Govindarajan

Meenakshi Govindarajan : மீனாட்சி கோவிந்தன் ஹீரோயினாக நடிக்கிறார். தற்போது விக்ரமுடன் கோப்ரா, சுசீந்திரன் இயக்கத்தில் சிவ சிவா படங்களில் நடித்து வருகிறார்.

68
Meenakshi Govindarajan

Meenakshi Govindarajan : வேலன் படத்தை கவின் எழுதி, இயக்கியுள்ளார். டிசம்பர் 31 வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் நடந்தது. 

78
Meenakshi Govindarajan

Meenakshi Govindarajan : இதில் கலந்து கொண்டு மீனாட்சி, இந்த காலேஜில் மூணு வருடத்திற்கு முன்பு முன்னாடி சீட் கேட்டு வந்தேன் கிடைக்கவில்லை ஆனால் இப்பொது ஒரு நடிகையாக, செலிபிரிட்டியாக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

88
Meenakshi Govindarajan

Meenakshi Govindarajan : வேலன் படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பில் நாங்களே சிரித்து, சிரித்து ரீடேக் வாங்கினோம், இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். என்றும் மீனாட்சி கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories