ilaiyaraaja
இசைஞானி இளையராஜா அன்னக்கிளி என்கிற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தின் தயாரிப்பாளருக்கு அவர் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் பஞ்சு அருணாச்சலம் தான் இளையராஜாவுக்கு பக்க பலமாக இருந்து அவரை அப்படத்திற்கு இசையமைக்க வைத்திருந்தார். அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் சரித்திர பயணம் 45 ஆண்டுகளைக் கடந்தும் மக்களை தன் பாடல்களால் மகிழ்வித்து வருகிறார்.
இந்நிலையில், இளையராஜா அன்னக்கிளி படத்துக்காக இசையமைத்த முதல் பாடலின் கம்போஸிங் போது கரெண்ட் கட்டானது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ilaiyaraaja Song Secret
இதுகுறித்து இளையராஜாவே ஒரு விழாவில் கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது : “முதல் பாடத்துக்காக முதல் பாடல் கம்போஸ் செய்யும் போது கரெண்ட் கட்டானது என்னை மனதளவில் பாதித்தது.
அன்னக்கிளி எனக்கு முதல் படம் என்பதால் எனக்கு இசைக்கலைஞர்களை வைத்து வேலை வாங்கத் தெரியுமா என்பதை செக் செய்ய என்னை ஒரு ரிகர்சல் பார்க்க சொன்னார்கள். அதற்காக கண்ணதாசன் வீட்டின் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் ஜானகியை பாட வைத்து ரிகர்சல் பார்த்துவிட்டு, படத்தின் பூஜையன்று முழு பாடலையும் பதிவு செய்ய ஸ்டூடியோவுக்கு சென்றேன். அங்கு ஒவ்வொரு பிட்டாக ரிகர்சல் பார்த்துவிட்டு ஃபுல் பாடலை ரெக்கார்ட் செய்ய தயாரானோம்.
இதையும் படியுங்கள்...சூர்யாவின் ‘நவம்பர்’ மேஜிக்... ‘கங்குவா’வுக்கும் கைகொடுக்குமா?
Annakili Movie Song secret
எல்லோரும் தயாராக இருந்தார்கள். ரெடியா என கேட்டுவிட்டு, 1. 2, 3, 4னு சொல்றே கரெண்ட் கட் ஆயிடுச்சு. உடனே அங்கு இருந்த ஒரு இசைக் கலைஞர் என்னைப் பார்த்து நல்ல சகுனம்டானு சொன்னார். அப்போது மிகவும் அப்செட் ஆகி ஒரு மூலையில் சென்று உட்கார்ந்துவிட்டேன். அதன்பின்னர் இயக்குனர் பி மாதவன் என்னை பார்க்க அங்கு வந்திருந்தார். அப்போது கருமாரி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு பிரசாதத்துடன் வந்திருந்தார்.
Isaignani ilaiyaraaja
மிகவும் அப்செட்டில் நான், அந்த கோவில் பிரசாதத்தை வாங்கிய பின் சற்று சந்தோஷப்பட்டேன். பின்னர் கரெண்ட் வந்ததும் மீண்டும் இசையமைத்துவிட்டு அந்த பாடலை அனைவருக்கும் போட்டுக்காட்ட ரெக்காடிஸ்டை அழைத்து போட்டுக்காட்ட சொன்னேன். அவர் அந்த கேசட்டை போட்டு போட்டு பார்க்கிறார் ஆனால் பாடல் டேப்பில் பதிவாகவே இல்லை என்பது தெரியவந்தது.
இப்படி பல்வேறு தடங்கல்களுக்கு பின்னர் அவர் இசையமைத்த அந்த பாடல் தான் ‘அன்னக்கிளி உன்னை தேடுதே’ பாட்டு. ஜானகி பாடிய அந்த பாடல் தான் ராஜா எனும் இசை அரசனை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. அதன்பின்னர் ஒரு மிகப்பெரிய இசைப்புரட்சியையே செய்துவிட்டார் இளையராஜா.
இதையும் படியுங்கள்... வனிதா விஜயகுமார் வீட்டில் நடந்த மிட் நைட் செலிபிரேஷன்! வைரலாகும் போட்டோஸ்!