பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் என்கிற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக 'சந்திரலேகா' திரைப்படத்தில் வனிதா விஜயகுமார் அறிமுகமாகி இருந்தாலும், இன்று தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் இவர் நடித்து வருவதற்கு முழு காரணம் இவரின் திறமை தான்.
தங்க தொட்டிலில் போட்டு வளர்க்கப்பட்ட விஜயகுமார் - மஞ்சுளாவின் மூத்த மகளான இவர்.. மூன்று குழந்தைகளுக்கு தாயான பின்னர், தன்னுடைய குடும்பத்தினராலேயே பட்ட கஷ்டமும், சந்தித்த பிரச்சனைகளும் கொஞ்சம் நஞ்சம் அல்ல. தன்னுடைய மகனை தன்னிடம் வைத்து கொள்ள வேண்டும் என, நீதிமன்றம் வரை சென்று போராடி சோர்ந்து போன வனிதா, மகள் ஜோவிகாவுடன் தான் தற்போது வசித்து வருகிறார்.