
சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் குறித்து... சமீபத்தில் பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் கொடுத்துள்ள பேட்டியில், பேச துவங்குவதற்கு முன்பே... "சித்தார்த் தன்னை ஒரு எதிரியாக கருதுபவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே, நான் கலந்து கொண்டால் பிரஸ்மீட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என கூறியவர். விஷாலுக்கு முன்னோடி அவர் தான். ஆனால் கடைசியில் அவர்தான் தமிழ் சினிமாவில் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டார். நானென்னலம் ஒரு சின்சியர் ஜர்னலிஸ்ட். சீனியர் ஜர்னலிஸ்ட். என்னையெல்லாம் அவர் பகைத்து கொண்டால்... சினிமாவை பகைத்துக் கொண்டதற்கு சமம். அதே நேரம் சித்தார்த் மிகவும் திறமையான நடிகர். ஆனால் ஒழுக்கம் இல்லாதவர் என பயில்வான் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன், சித்தார்த்திடம், "முதல் மனைவியுடன் ஏன் விவாகரத்து செய்தீர்கள்? என்று கேட்டால்... அதெல்லாம் சொல்ல முடியாது என கூறுவார். அதன்பின்னர் அவருடைய லீலைகள் எல்லாம் பெரிய பெரிய இடத்து பெண்களிடம் தான் இருந்தது. கமலஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் உடன், ஹைதராபாத்தில் லிவிங் டூகெதர் வாழ்க்கையில் இருந்தார். பின்னர் அவரை விட்டு பிரிந்ததும், சமந்தாவுடன் லிவிங் டூகெதர் வாழ்க்கையில் வாழ்ந்தார். இதே போல் அவர் தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை வசப்படுத்துவதில் வல்லவர். இவர் கிட்டதட்ட ஜெமினி கணேசன் டைம் என கூறலாம். அதேநேரம் ஜெமினி கணேசன் மாதிரி என்று நான் சொல்ல மாட்டேன். அவரைப் போலவே பெண்களை வசப்படுத்துவதில் திறமையான ஆள் சித்தார்த். அதனால் இவரை ஒரு ஒழுக்கம் இல்லாதவர் என்று தான் கூற வேண்டும்.
அதிதி ராவ் எப்படி சித்தார்த்திடம் சிக்கினார் என்றால், இவரும் தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். அவரும் ஏற்கனவே விவாகரத்தானவர். இவர்கள் இருவருமே விவாகரத்தானவர்கள் என்பதால், தங்களுடைய பாஸ்ட் லைஃப் குறித்து பேசக்கூடாது என்பது இருவருக்குமே எழுதப்படாத நிபந்தனையாக இருக்கும். அதேபோல் புடித்தால் புளியம் கொம்பாக பிடிக்க வேண்டும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, அதிதி ராவ் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர் வீட்டு பெண் என்பதை பார்த்து தான் சித்தார்த் அவரை காதலித்தார். இவர்களின் கல்யாணம் கூட, சித்தார்த் வீட்டு முறைப்படி நடக்காமல்... அதிதி ராவின் குடும்ப புராதான கோவிலில் தான் நடந்துள்ளது. கல்யாணம் ஆன உடனேயே தன் பக்கம் பிடித்து இழுத்து விட்டார் சித்தார்த்தை. நிச்சயதார்த்தமும் இவர்களுக்கு மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
அதிதி ராவ் முழுக்க முழுக்க ஒரு ஹீரோயின் தோற்றத்தில் உள்ள பெண் இல்லை. ஆனால் ஆள் மட்டும் பார்க்க வெள்ளையா இருப்பாங்க. சித்தார்த்துக்கு வயசாகிக்கொண்டே போவதால், வேறு வழியில்லாமல் இவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் சித்தார்த் - சமந்தா பிரிவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பயில்வான்... பொதுவாகவே நடிகர்களை பொருத்தவரை, அவரவர் செய்யும் தவறுகளை மற்றவர்கள் கேட்கவோ... விமர்சிக்கவோ கூடாது என நினைப்பார்கள். அப்படி கேட்கும் பட்சத்தில் அது பிரச்சினையாக வெடித்து பின்னர் பிரிவாக மாறிவிடுகிறது. அது தான் சமந்தா - சித்தார்த் விஷயத்திலும் நடந்தது என கூறினார்.
உலக நாயகன் கமல்ஹாசன் சித்தார்த்துக்கு ஸ்ருதியை திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்ததாக ஏற்கனவே வெளியான தகவலை குறிப்பிட்டு பயில்வான் ரங்கநாதனிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, என்னை பொறுத்தவரை கமல்ஹாசன் அப்படி நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அது எனக்கு தெரியாது. ஸ்ருதிஹாசன் ஆரம்பத்தில் இருந்தே திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். ஐம் நாட் ஃபிட் ஃபார் மேரேஜ் என்பதை பலமுறை தெளிவாக கூறியுள்ளார்.
பின்னர் அதிதி ராவ் மிகவும் பணக்கார வீட்டு பெண் என்பதால், சித்தார்த் அவரிடம் இருந்து வரதட்சணை ஏதேனும் பெற்றாரா? என தொகுப்பாளர் பயில்வானிடம் எழுப்பிய கேள்விக்கு... " ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், அந்த வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டாலே அவருக்கு சேர வேண்டிய ஆஸ்தி அத்தனையும் இவருக்கு தானே வரப்போகிறது. அது ஏன் முதலிலேயே கேட்கணும். அவரு என்ன ரோட்ல போற ஒரு பெண்ணையோ அல்லது சாதாரண வீட்டு பெண்ணையோவா காதலித்து திருமணம் செய்து கொண்டார்? எனது அல்ல அப்கம்மிங் ஆர்டிஸ்ட்டை காதலித்து திருமணம் செய்தாரா? வெல் செட்டில் ஆன ஒரு நடிகை தான் சித்தார்த் திருமணம் செய்துள்ளார். எனவே அந்த இன்டென்ஷன் இல்லாமல் திருமணம் செய்து கொண்டிருப்பார், என நான் கூற மாட்டேன். அதே போல் அந்த இன்டென்ஷன் மட்டுமே இவர்களின் திருமணத்திற்கு காரணம் என்பதையும் என்னால் உறுதியாக கூற முடியாது என நாசுக்காக பேசியுள்ளார்.
மேலும் யாரு தான் சொகுசு வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்? அதாவது வரலட்சுமி சரத்குமார் மும்பையைச் சேர்ந்த புராதான பொருட்களை விற்பனை செய்யும் ஒரு பணக்கார தொழிலதிபரை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் பணத்துக்காக தான் திருமணம் செய்து கொண்டார் என நான் சொல்ல மாட்டேன், இடையில் காதலும் இருக்கலாம் என... வரலட்சுமியை இதில் கோர்த்து விட்டு பயில்வான் பதிலளித்துள்ளார். இதை தவறு என்று சொல்ல முடியாது. ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணை ஒருவர் திருமணம் செய்து கொள்வதும், ஒரு பணக்கார வீட்டு பையனை பெண் திருமணம் செய்து கொள்வதும் அவரவர் மெட்டாலிட்டியை பொறுத்தது என பயில்வான் இந்த பேட்டியில் பேசியுள்ளார்.