பான் இந்தியா படங்களின் வருகைக்கு பின் பல்வேறு மொழி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடிப்பது அதிகரித்து வருகிறது. உதாரணத்திற்கு தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் மாபெரும் வசூல் அள்ளிய படங்கள் என்றால் அது விக்ரம், ஜெயிலர், லியோ போன்ற படங்கள் தான். இதன் வெற்றிக்கு பின்னணியிலும் பான் இந்தியா நட்சத்திரங்கள் இருக்கின்றனர். குறிப்பாக விக்ரம் படத்தில் பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற பான் இந்தியா ஸ்டார்ஸ் இருந்ததால் அப்படம் பெரியளவில் வெற்றியடைந்தது.
அதேபோல் ஜெயிலர் படத்தில் மோகன்லால் மற்றும் ஷிவ ராஜ்குமாரின் கேமியோ பெரியளவில் படத்திற்கு பலம் சேர்த்திருந்தது. லியோ படத்திலும் சஞ்சய் தத் நடித்திருந்ததால் அப்படத்திற்கு வட மாநிலங்களிலும் நல்ல ரீச் இருந்தது.