Manimegalai Salary for Cook With Comali : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக விலகிய மணிமேகலை அந்நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பள விவரம் கசிந்துள்ளது.
விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக காமெடிக்கு பஞ்சமில்லாத ஷோவாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சியாக மாறி இருக்கிறது. அந்நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடக்கத்தில் இருந்தே பல பிரச்சனைகளில் சிக்கி வருகிறது. ஆரம்பத்தில் வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியை விட்டு விலகியது மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியது. இந்நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.
25
Cook With Comali Manimegalai
வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜை நடுவராக போட்டு நிகழ்ச்சியை தொடங்கினர். பல எபிசோடுகளை தாண்டி குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிகழ்ச்சி இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைய உள்ளது. அண்மையில் இதன் அரையிறுதி சுற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பிரியங்கா தேஷ்பாண்டே, சுஜிதா தனுஷ், இர்பான் ஆகியோர் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.
இந்த அரையிறுதி சுற்றுக்கான ஷூட்டிங் நடைபெற்ற போது தான் மணிமேகலைக்கும், பிரியங்காவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இதில் பிரியங்கா தன்னுடைய ஆங்கர் வேலைகளில் அடிக்கடி மூக்கை நுழைப்பதாகவும் அது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை எனக்கூறி மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அவரின் இந்த திடீர் விலகலால் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியது.
45
Manimegalai vs Priyanka Deshpande
பிரியங்கா இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே இப்படி தான் ஆதிக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் என்று வீடியோ வெளியிட்டு நெட்டிசன்கள் சாடி வந்தனர். மறுபுறம் மணிமேகலைக்கு ஆதரவாகவும் ஏராளமான பதிவுகள் வந்தன, இதுவரை மணிமேகலை மட்டுமே விளக்கமளித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். பிரியங்கா தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. அவர் தற்போது விடுமுறைக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளதால் இந்தியா திரும்பியதும் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
55
Manimegalai Salary for Cook With Comali
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதலில் கோமாளியாக களமிறங்கிய மணிமேகலை கடந்த 2 சீசன்களாக தான் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அதன்படி இந்த சீசனில் தனக்கு காசை விட சுயமரியாதை தான் முக்கியம் என வேலையை தூக்கியெறிந்துவிட்டு சென்ற மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இவர் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.