அதிதி ராவ் இதைத் தான் காலையில் செய்வாராம்; நடிகர் சித்தார்த்!!

Published : Sep 18, 2024, 09:34 PM IST

நடிகை அதிதி ராவ் ஹைதரியை நடிகர் சித்தார்த் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். 

PREV
14
அதிதி ராவ் இதைத் தான் காலையில் செய்வாராம்; நடிகர் சித்தார்த்!!
ரங்கநாயக ஸ்வாமி கோவில்

அதிதி ராவ், சித்தார்த் செப்டம்பர் 16, 2024 அன்று தெலுங்கானாவின் வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ரங்கநாயக ஸ்வாமி கோவிலை தேர்வு செய்து திருமண செய்து கொண்டனர். மணமக்கள் இருவரும் பாரம்பரிய உடையில் ஜொலித்தனர்.  

24
வோக் பேட்டி

சித்தார்த், அதிதி இருவரும் தங்களது திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு வோக் பத்திரிகைக்கு பேட்டி அளித்து இருந்தனர். 'சொல்லுங்க உண்மை' அமர்வில், அவர்கள் சில ஆச்சரியமான தகவல்களை வெளியிட்டனர். அவர்களின் நட்பு எவ்வளவு வலுவானது என்பதை இந்தப் பேட்டியின் மூலம் வெளிப்படுத்தினர். 

34
சித்தார்த் சொன்ன ரகசியம்

அதிதி ராவ் ஹைதரி காலையில் முதலில் என்ன செய்வார் என்ற கேள்விக்கு, ''காலையில் முதலில் அதிதி எழுந்தவுடன் என்னையும் எழுப்பி விடுவார். எனக்கு இது பிடிக்கவே பிடிக்காது. என்னுடைய சம்மதம் இல்லாமல் இது நடக்கும். விருப்பம் இல்லாமல் எழுந்து அழுகையுடன் எனது நாளை துவக்குவேன்'' என்று சித்தார்த் கூறி இருந்தார். ''சித்தார்த் வேட்டி மற்றும் கேசுவல் உடை உடுத்தி இருந்தால் தனக்குப் பிடிக்கும் என்று அதிதியும் தெரிவித்து இருந்தார்.

44
அதிதி பட்டு சேலை

அதிதி தனது திருமண நாளில் பனாரஸ் திசு சேலையை உடுத்தி இருந்தார். இந்த சேலையை புகழ்பெற்ற வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி வடிவமைத்து இருந்தார். இருப்பினும், அவரது கணவர் சித்தார்த் கையால் நெய்யப்பட்ட பனாரஸ் வேட்டி, பட்டு குர்தா அணிந்திருந்தார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories