ஹீரோயின் ஆசையில்.. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் குழந்தை நட்சத்திரம்! யார் தெரியுமா?

First Published | Sep 18, 2024, 7:15 PM IST

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்து புதிய அப்டேட்ஸ் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஹிட் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஒருவர் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
 

Biggboss season 8

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் பிக்பாஸ் துவங்கும் தேதி புதிய புரோமோவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து, அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக களம் இறங்க உள்ளார். எனவே இந்த சீசனில் ரசிகர்கள் புதிய போட்டியாளர்களை எப்படி வரவேற்க ஆர்வமாக கார்த்திருக்கின்றனரோ அதே போல் புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்வார் என்கிற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Biggboss season 8 Contestant

இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக தொகுப்பாளர் மாகாபா, சீரியல் நடிகை அக்ஷிதா, அமலா ஷாஜி, குரேஷி, ஷாலின் சோயா, டிடிஎப் வாசன், சம்யுக்தா விஸ்வநாதன், பூனம் பாஜ்வா, பப்லு பிரிதிவிராஜ் போன்ற பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இவர்களை பற்றிய அதிகார பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், தற்போது இந்த லிஸ்டில் புதிய பிரபலம் ஒருவரின் பெயர் அடிபடுகிறது.

அந்த படத்தின் கதை தான் என்னுடைய கதை! என் அப்பவே இந்த வார்த்தையை சொன்னாரு - நடிகர் சக்தி கூறிய தகவல்!
 


Maharaja Movie Child Artist

இந்த பிரபலத்திற்கு விஜய் சேதுபதியே நேரடியாக சிபாரிசும் செய்துள்ளாராம். அவர் வேறு யாரும் அல்ல. கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான, 'மகாராஜா ' படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்த சச்சனா நமிதாஸ் தான். இவர் பார்ப்பதற்கு சிறிய பெண் போல் இருந்தாலும் தனக்கு 24 வயது ஆவதாக ஏற்கனவே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
 

Sachana Namidass

குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றி வாய்ப்பை கைப்பற்றிய சச்சனா நமிதாஸ், ஹீரோயின் வாய்ப்புக்கு கொக்கி போடும் விதமாகவே தான் தற்போது, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நுழைய உள்ளதாக கூறப்படுகிறது. புதிய போட்டியாளர்கள் பெயர் அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிபட்டு வருவதால்... பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி எப்போது துவங்கும் என கார்த்திருக்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

குடும்பத்தை களைத்து.. ஜெயம் ரவியை ஆட்டி வைக்கும் கெனிஷா பிரான்சிஸ் யார்? அதிரவைக்கும் பின்னணி!

Latest Videos

click me!