
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் வாசு. இவருடைய மகன் சக்தி, தமிழ் சினிமாவில் 1990 ஆம் ஆண்டு வெளியான 'நடிகன்' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் சின்னத்தம்பி, ரிக்ஷா மாமா, செந்தமிழ் பாட்டு, இது நம்ம பூமி, போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதை தொடர்ந்து, தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தி வந்த சக்தி, கல்லூரி படிப்பை முடித்த பின்னர், 2007 ஆம் ஆண்டு தன்னுடைய தந்தை பி வாசு இயக்கத்தில் 'தொட்டால் பூ மலரும்' என்கிற படத்தில் நடித்தார். முதல் படம் சக்திக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று தரவில்லை என்றாலும், விமர்சனர் ரீதியாக இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது.
இந்த படத்திற்கு பின்னர், மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன், போன்ற படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால்... மீண்டும் நடிக்க முயற்சிக்காமல் மெல்ல மெல்ல திரைப்படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்டு, மற்ற பணிகளில் கவனம் செலுத்த துவங்கினார். தமிழில் அறிமுகமானாலும், தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் குணச்சித்திர வேடத்தில் சில படங்களில் நடித்துள்ளார்.
குடும்பத்தை களைத்து.. ஜெயம் ரவியை ஆட்டி வைக்கும் கெனிஷா பிரான்சிஸ் யார்? அதிரவைக்கும் பின்னணி!
மீண்டும் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற கனவுடன், கடந்த 2017 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ்' முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் எதார்த்தமாக விளையாடிய போதிலும், காயத்ரி ரகுராமன் சொல்வதை செய்யும் ஒரு பொம்மை போல் இவர் செயல்பட்டதால் ரசிகர்களின் கோவங்களுக்கு ஆளானார். அதே போல் ஓவியா தன்னை ட்ரிகர் செய்வதாக சக்தி அடிக்கடி கூறியதால்... இவரை ரசிகர்கள் ட்ரிகர் சக்தி என்றும் அழைத்தனர். சரியான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் சக்தி, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்... கவின் - இளன் காம்போவில் வெளியான, ஸ்டார் திரைப்படத்தின் கதை தன்னுடைய கதை என மிகவும் ஏமோஷ்னலாக பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "ஸ்டார் படம் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட நான் அழுதுட்டேன். ஏன்னா அந்த கதை என்னுடைய நிஜ கதை மாதிரியே இருந்துச்சு. இந்த படத்தில் ஒரு சீன்ல அப்பா... தன்னுடைய பையன் கிட்ட ஆக்சிடென்ட் ஆனதால நீ உன் வாழ்க்கையில் தோற்று போகல. ஆனா நீ என்னைக்கு கண்ணாடியை பார்க்க மறந்தாயோ அன்னைக்கு நீ தோத்துட்ட என்பார். இதை தான் என் அப்பாவே என்கிட்ட சொல்லி இருக்காரு. அன்னையிலிருந்து தான் நான் கண்ணாடி பார்க்க ஆரம்பிச்சேன் என பி வாசுவின் மகன் சக்தி கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு, கவின் நடிப்பில் இயக்குனர் இளன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் ஸ்டார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அதிதி போகன்கர், ப்ரீத்தி முகுந்தன், ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் லொள்ளு சபா மாறன், தீரஜ் மாதேஷ், சாய் பிரசன்னா, ஆகியோர் நடித்திருந்தனர். காதல் சுகுமார், வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகனாக ஆசைப்படும், கவின் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் தோல்விகளில் இருந்து எப்படி தன்னுடைய நடிகன் என்கிற கனவை அடைகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.