ஒன்னில்ல ரெண்டில்ல 550 முறை! அதிகம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படம் பற்றிய ஆச்சர்ய தகவல்

First Published | Sep 19, 2024, 8:57 AM IST

Most Re-Released Movie : ஹிட்டான படங்களை ரீ-ரிலீஸ் செய்து திரையரங்குகள் கல்லாகட்டி வரும் நிலையில், இந்தியாவில் அதிகமுறை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படம் பற்றி பார்க்கலாம்.

Rajinikanth, Shiva Rajkumar

ரீ-ரிலீஸ் கலாச்சாரம் நாடு முழுவதும் தற்போது பரவலாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் புதுப்படங்கள் எதுவும் கைகொடுக்காததால் தியேட்டர்கள் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து கல்லாகட்டின. அந்த வேளையில் நடிகர் விஜய், த்ரிஷா நடித்த மாஸ்டர் பீஸ் படமான கில்லி திரைப்படமும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டதோடு வசூலையும் வாரிக்குவித்தது. அப்படம் கிட்டத்தட்ட ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

OM Movie

அதேபோல் தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து ஹிட் அடித்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தையும் அண்மையில் தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்தனர். அதற்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படி ரீ-ரிலீஸ் படங்களுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், ஒரு படம் மட்டும் 550 முறை ரீ-ரிலீஸ் ஆகி சாதனை படைத்திருக்கிறது. அது என்ன படம் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்.

Tap to resize

Most Re-Released Movie

கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ஷிவ ராஜ்குமார். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட ஜெயிலர் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து மாஸ்காட்டி இருந்தார். அவர் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே படத்தில் வந்தாலும் அந்த காட்சிகளெல்லாம் அரங்கம் அதிர விசில் சத்தம் பறந்தன. அப்படி ஒரே படத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் ஷிவ ராஜ்குமார்.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளியே வேண்டாம்னு தூக்கியெறிந்த மணிமேகலை; வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

OM Movie Shiva Rajkumar

ஜெயிலர் படத்தின் அமோக வெற்றிக்கு பின்னர் தனுஷ் உடன் சேர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்த அவர், தற்போது பிரபுசாலமன் இயக்கும் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இப்படி கோலிவுட்டிலும் கலக்கி வரும் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார் நடித்த படம் தான் அதிக முறை ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

ஷிவ ராஜ்குமார் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் ஓம். இப்படத்தை உபேந்திரா இயக்கி இருந்தார். பெங்களூருவில் உள்ள கேங்ஸ்டர்கள் பற்றிய படம் தான் இது. இந்தப்படம் தான் கர்நாடகாவில் கிட்டத்தட்ட 550 முறை ரீ-ரிலீஸ் ஆகி அனைத்து முறையும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 

இதையும் படியுங்கள்... அந்த படத்தின் கதை தான் என்னுடைய கதை! என் அப்பவே இந்த வார்த்தையை சொன்னாரு - நடிகர் சக்தி கூறிய தகவல்!

Latest Videos

click me!