Published : Sep 19, 2024, 11:00 AM ISTUpdated : Sep 19, 2024, 11:04 AM IST
Kanguva New Release Date : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள கங்குவா திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில், தற்போது புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் ஆனது. அப்படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. அதன்பின்னர் ஒரு படம் கூட சூர்யா நடிப்பில் வெளியாகவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர் கங்குவா என்கிற பிரம்மாண்ட படத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக உழைத்து வந்தார்.
25
Kanguva Suriya
கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமாக கங்குவா உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். மேலும் வில்லனாக இந்தி நடிகர் பாபி தியோல் மிரட்டி இருக்கும் இப்படத்தில் பிரேம்குமார், கருணாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் கார்த்தியும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட 10 மொழிகளுக்கு மேல் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். அவர் இசையமைப்பில் வெளிவந்த ஃபயர் சாங் அண்மையில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
45
vettaiyan, Kanguva
கங்குவா திரைப்படத்தை பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். அதனால் இப்படத்தை வருகிற அக்டோபர் 10ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் செய்ய உள்ளதாக முதலில் அறிவித்தனர். ஆனால் அன்றைய தினம் ரஜினியின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், கங்குவா படக்குழு வேறுவழியின்றி ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு செய்தனர்.
55
Kanguva New Release Date
அது என்ன தேதி என்பதை சீக்ரெட்டாக வைத்திருந்த நிலையில், தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி கங்குவா திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி உலகளவில் ரிலீஸ் ஆக உள்ளது. அன்றைய தினம் பான் இந்தியா அளவில் இப்படம் போட்டியின்றி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படி சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆக உள்ள கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி 1000 கோடி வசூலை எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.