மார்ச் 8-ஆம் தேதி, லண்டனில் தன்னுடைய சிம்பொனி இசையை அரங்கேற்றி இந்தியாவை பெருமைப்படுத்திய இசையமைப்பாளர் இளையராஜாவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் 8-ஆம் தேதி, லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் தனது முதல் சிம்பொனி வேலியண்ட் இசையை அரங்கேற்றினார். இதற்கு முன்பு வெளிநாட்டை சேர்ந்த சில இசை கலைஞர்கள் மட்டுமே சிம்பொனி அரங்கேற்றி உள்ள நிலையில், இளையராஜாவின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுக்க உள்ளதாகவும் அறிவித்தார்.
24
இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து:
அணைத்து தரப்பில் இருந்தும் இளையராஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், பாரத பிரதமர் மோடியும் இளையராஜாவை சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை வெளிப்படுத்தும் விதமாக, இளையராஜா பிரதமரை சந்தித்தபோது எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் உருக்கமாக தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். இந்த பதிவில், , "சிம்பொனி வேலியண்ட் உட்பட பல விஷயங்கள் பற்றி பேசினோம். இந்த சந்திப்பு மறக்க முடியாத ஒன்று. பிரதமர் மோடியின் பாராட்டுக்கும் - அவரின் ஆதரவுக்கும் தலைவணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இளையராஜாவை பாராட்டும் விதமாக, பிரதமர் மோடி சில புகைப்படங்களுடன் போட்டுள்ள பதிவில், "நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இசை ஜாம்பவான் ராஜ்யசபா உறுப்பினர் திரு இளையராஜா ஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி.
அவர் எல்லா வகையிலும் ஒரு முன்னோடி, சில நாட்களுக்கு முன்பு லண்டனில் தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான வேலியண்டை அரங்கேற்றியதன் மூலம் மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்கி உள்ளார். இந்த நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நிகழ்த்தப்பட்டது. இந்த மகத்தான சாதனை அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - இது உலக அளவில் சிறப்பை மறுவரையறை செய்து கொண்டே இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
44
இளையராஜா இசையை ரசிக்கும் இளம் தலைமுறையினர்
மேலும் இளையராஜா பகிர்ந்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 1976-ஆம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' படம் மூலம் தனது இசை பணியை துவங்கிய இளையராஜா அரை நூற்றாண்டு கண்ட முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். இதுவரை 3 தலைமுறை நடிகர்களுக்கு இசையமைத்துள்ள இளையாராஜா, 15,000-தீர்க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளதோடு, 1000-திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவருடைய இசையை இன்றைய தலைமுறை ரசிகர்களும் அதிகம் ரசிக்கிறார்கள். இளையராஜா தன்னுடைய சிம்பொனியை எழுதி முடிக்க 1 முதல் 1.5 மாதங்கள் வரை நேரம் எடுத்து கொண்ட நிலையில், இதனை இசை வடிவில் உருவாக்க 34 நாட்கள் ஆனதாக கூறப்படுகிறது. இளையராஜாவின் இன்ஸ்பிரேஷனால், இளம் இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரமும் தன்னுடைய சிம்பொனியை அரங்கேற்ற தயாராகி இருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.