தனுஷின் இட்லி கடை படமும், ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் ஆன நிலையில், அதன் வசூல் நிலவரத்தை பற்றி பார்க்கலாம்.
தனுஷ் இயக்கிய இட்லி கடை படமும், ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆனது. அக்டோபர் 1-ந் தேதி இட்லி கடையும், அக்டோபர் 2-ந் தேதி காந்தாரா சாப்டர் 1 படமும் திரைக்கு வந்தன. இந்த இரண்டு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இந்த இரண்டு படங்களின் இயக்குனர்கள் தான் இதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்கள். இதில் இட்லி கடை படத்தை டான் பிக்சர்ஸ், ஒண்டர்பார் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன. அதேபோல் காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
24
இட்லி கடை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இட்லி கடை திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே வசூலில் பெரியளவில் சோபிக்கவில்லை. இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகும் நிலையில், அது உலகளவில் ரூ.58 கோடி வசூலித்து இருக்கிறது. இதே நிலை நீடித்தால் இப்படம் ரூ.75 கோடி வசூலிப்பதே கேள்விக் குறிதான் என கூறப்படுகிறது. இட்லி கடை படம் 100 கோடி வசூலிக்க வாய்ப்பில்லை என்றே டிராக்கர்களும் கூறுகிறார்கள். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் கூட கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 100 கோடி வசூலை குவித்திருந்தது.
34
காந்தாரா சாப்டர் 1 வசூல் நிலவரம்
காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தை பொறுத்தவரை இப்படம், ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே வசூலை வாரிக் குவித்து வருகிறது. இப்படம் வெளியாகி 6 நாட்கள் ஆகும் நிலையில், தற்போது வரை ரூ.427 கோடி வசூலித்திருப்பதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதில் அதிகபட்சமாக இப்படத்தின் இந்தி வெர்ஷன் மட்டும் ரூ.100 கோடி வசூலை எட்டி இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இட்லி கடை படத்தைவிட காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்திற்கு தான் அதிகளவு வசூல் கிடைத்து வருகிறது.
காந்தாரா படத்தின் முதல் பாகம் மொத்தமாக ரூ.400 கோடி வசூலித்திருந்தது. ஆனால் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியான ஆறு நாட்களிலேயே அந்த வசூலை முந்தி சாதனை படைத்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் இப்படம் ஆயிரம் கோடி வசூலிக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமாக சாவா உள்ளது. அப்படம் 930 கோடி வசூலித்ததே சாதனையாக உள்ள நிலையில், காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் அந்த சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.