இளம் நடிகையுடன் டேட்டிங் செய்யும் ஹிருத்திக் ரோஷன்..வைரலாகும் ஏர்போர்ட் புகைப்படங்கள்!

First Published | Jul 25, 2022, 4:03 PM IST

ஐரோப்பாவில் பல மாதங்கள் டேட்டிங் செய்த பிறகு ஹிருத்திக் மற்றும் ஷாபா இருவரும் தங்கள் சமூக ஊடகம்  மூலம்  காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

hrithik roshan saba azad

பாலிவுட் பிரபலம் ஹிருத்திக் ரோஷன் தற்போது இளம் நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக சமீப காலமாக கிசுகிசுக்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சாபா ஆஷா ஐரோப்பாவில் ஆடம்பரமான நேரத்தை கழித்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தனர்.

hrithik roshan saba azad

இந்நிலையில் இருவரும் கைகோர்த்து விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இவர்களுடன் ஹிருத்திக் ரோஷன் அம்மா பிங்கி ரோஷன் மற்றும் மகன்கள் ஹ்ரேஹான் மற்றும் ஹிருடான் ஆகியோரும் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...கத்ரீனா கைஃப்-விக்கி கௌஷலுக்கு மிரட்டல் விடுத்த நபர்..போலீசில் புகார் அளித்த நட்சத்திர ஜோடி

Tap to resize

hrithik roshan saba azad

ஐரோப்பாவில் இருந்தபோது ஷாபா தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் போட்டோஸை வெளியிட்டிருந்தனர். பல மாதங்கள் டேட்டிங் செய்த பிறகு ஹிருத்திக் மற்றும் ஷாபா இருவரும் தங்கள் சமூக ஊடகம்  மூலம்  காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு...ஆர் ஆர் ஆர் பிரபலத்தை புக் செய்த சூப்பர் ஸ்டார்.. வெளியானது நியூ லுக் போட்டோஸ்

கோவாவில் ஹிருத்திக்கின் முன்னாள் மனைவி சுசானே கானின் பார்ட்டியில் கூட இந்த ஜோடி கலந்து கொண்டது. அவரது முன்னாள் மனைவி தற்போது Arslan Goni என்பவருடன் உறவில் உள்ளார். இந்த தம்பதிகள் கடந்த  2014ல் தங்கள் இரண்டு மகன்களுக்கு  பெற்றோராக மட்டும் இருக்க போவதாக அறிவித்து விவாகரத்து செய்து கொண்டனர்.

மேலும் செய்திகளுக்கு...Dosa King : ஜெய்பீம் இயக்குனரின் அடுத்த அதிரடி... சரவணபவன் ராஜகோபால் - ஜீவஜோதி கதையை படமாக்குகிறார் TJ ஞானவேல்

ஹிருத்திக் தனது வரவிருக்கும் அதிரடி நாடகமான விக்ரம் வேதாவின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.இந்த படம் தமிழில் வெளியான விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். அதோட ஹிருத்திக் ரோஷன் பைட்டர் படத்தில் நடித்த வருகிறார் அதில் தீபிகா படுகோன் நகையாக வருகிறார்நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

Latest Videos

click me!