பாலிவுட்டில் பிசியான விஜய் சேதுபதி... கத்ரீனா கைஃப் உடன் காத்துவாக்குல காதல் செய்யும் போட்டோஸ் வைரல்

First Published | Jul 25, 2022, 2:43 PM IST

Vijay Sethupathi : ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகி வரும் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் ஆகிய இரண்டும் படங்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதையடுத்து இவருக்கு இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி பட வாய்ப்புகளும் அதிகளவில் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது இந்தியில் தயாராகு மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். இவர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற அந்தாதூன் படத்தை இயக்கியவர் ஆவார்.

இதையும் படியுங்கள்... கத்ரீனா கைஃப்-விக்கி கௌஷலுக்கு மிரட்டல் விடுத்த நபர்..போலீசில் புகார் அளித்த நட்சத்திர ஜோடி

Tap to resize

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை கத்ரீனா கைஃப் உடன் நடிகர் விஜய் சேதுபதி ரிகர்சல் செய்தபோது எடுத்த கேண்ட்டிட் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதி பாலிவுட்டிலும் காத்துவாக்குல காதலிக்க ஆரம்பிச்சிட்டாரு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதுதவிர பாலிவுட்டில் நடிகர் விஜய் சேதுபதி கைவசம் காந்தி டாக்கீஸ் என்கிற மவுன படமும், மும்பைகார் என்கிற படமும் உள்ளது. இதில் மும்பைகார் படம் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... படமாகிறது சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி கதை... பல திருப்பங்களுடன் 18 வருடம் நீடித்த வழக்கின் முழு விவரம்

Latest Videos

click me!