தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் தற்போது அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குண்டாக இருந்த குஷ்பு, கடந்த ஆண்டு ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறினார். அவர் உடல் எடையை குறைத்ததைப் பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டனர். அவரிடம் எப்படி குறைத்தீர்கள் என்றெல்லாம் தொடர்ந்து கேட்டு வந்தனர்.
24
இதற்கு பதிலளித்த குஷ்பு, தான் தினமும் வாக்கிங் சென்றதாகவும், அதன் மூலமே உடல் எடையை குறைத்ததாகவும் கூறினார். உடல் எடையை குறைத்த பின்னர் நடிகை குஷ்பு, விதவிதமான ஆடைகளில் புகைப்படங்கள் எடுத்து அதனை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அவ்வாறு அவர் பதிவிடும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் தினந்தோறும் உங்களின் வயது குறைந்துகொண்டே செல்வதாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஏராளமான பாசிடிவ் கமெண்ட்டுகள் வந்தாலும், அவரின் புகைப்படங்களுக்கு ஒரு சில நெகடிவ் கமெண்ட்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு குஷ்புவும் பதிலடி கொடுத்து வருகிறார்.
44
அந்த வகையில் சமீபத்தில் கோல்டன் நிறத்தில் இருக்கும் மாடர்ன் உடை ஒன்றை அணிந்து அவர் போட்டோ போட்டிருந்தார். இதைப்பார்த்த பெண் ஒருவர், அழகாகத்தான் இருக்கிறீர்கள். ஆனால் ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் தோல் திருத்தங்களை செய்ய வேண்டும்? உங்களுடைய நல்ல தோற்றத்துடனே நீங்கள் வயதாகலாம் என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த குஷ்பு, “நீங்க தான் அதுக்கு காசு கொடுத்தீங்களா மை டியர்? மத்தவங்கள துன்புறுத்தி கிடைக்கும் சந்தோஷத்தில் உங்களுக்கு என்ன கிடைக்குதுனு தெரியல. உன்னை நினைச்சா அவமானமா இருக்கு” என தரமான பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பு. அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.