இதுதான்டா இளையராஜா மேஜிக்..! படம் பிளாப்... ஆனா ஒத்த பாட்டை வச்சு 1 கோடி லாபம் பார்த்த தயாரிப்பாளர்

Published : Oct 28, 2025, 03:55 PM IST

இசைஞானி இளையராஜா இசையில் ஏராளமான ஹிட் பாடல்கள் வந்திருக்கின்றன, அதில் ஒரே ஒரு பாடல், ஒரு தயாரிப்பாளருக்கு கோடிக்கணக்கில் லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Ilaiyaraaja Song Give 1 Crore Profit to Producer

அன்னக்கிளி படம் மூலம் அறிமுகமான இளையராஜா, 50 ஆண்டுகளைக் கடந்தும் தன்னுடைய இசை ராஜ்ஜியத்தை தொடர்ந்து வருகிறார். அவரின் இசையை ரசிக்காத ஆளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு ஆத்மார்த்தமான பாடல்களால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார் இளையராஜா. 1980-களில் இளையராஜாவின் கால்ஷீட்டுக்காக அழைத்த தயாரிப்பாளர்கள் ஏராளம். ஏனெனில் இளையராஜா இசையமைத்தாலே அப்படத்தை விநியோகஸ்தர்கள் கண்ணை மூடிக் கொண்டு வாங்கி விடுவார்களாம். அந்த அளவுக்கு இளையராஜாவின் இசைக்கு டிமாண்ட் இருந்துள்ளது.

24
அவதாரம் பட பாடல் ரகசியம்

இளையராஜாவின் பாடல்களினாலே பேமஸ் ஆன படங்கள் ஏராளம் உண்டு. அதில் நாசர் நாயகனாக நடித்த அவதாரம் திரைப்படமும் ஒன்று. 1995-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தில் ரேவதி நாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகி இருந்தார் நாசர். கலை சார்ந்த படம் என்பதால் இதற்கு இளையராஜாவின் இசை தான் வேண்டும் என அடம்பிடித்து ராஜாவை புக் செய்தாராம். அப்போது பாடல் கம்போசிங்கிற்காக ஒருநாள் நாசரை அழைத்திருக்கிறார். அப்போது இளையராஜா ஒரு டியூன் போட்டுக் காட்ட, அது நாசருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

34
ஹைப் ஏத்திய இளையராஜா பாடல்

இதை எப்படி அவரிடம் சொல்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த நாசர், சிறிது நேரம் கழித்து வருவதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். அவர் திரும்பி வரும்போது பாடல் ரெக்கார்டிங்கையே முடித்துவிட்டாராம் இளையராஜா. வந்த அந்த பாடலை கேட்டதும் மெய் சிலிர்த்து போனாராம் நாசர். அவர் ஆரம்பத்தில் வேண்டாம் என சொல்ல இருந்த டியூனில் உருவான அந்த சூப்பர் ஹிட் பாடல் தான், தென்றல் வந்து தீண்டும் போது என்கிற பாட்டு. சொல்லப்போனால் அவதாரம் படத்திற்கு உயிர்கொடுத்ததே அந்தப் பாடல் தான். அப்பாடலினால் தான் அப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானதாம்.

44
ஒரு பாடலால் 1 கோடி லாபம்

பாட்டு ஹிட்டானாலும் படம் ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரும் 46 லட்சம் நஷ்டமாம். அந்த காலகட்டத்தில் இது மிகப்பெரிய தொகை. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தயாரிப்பாளர் செம சந்தோஷத்தில் இருந்தாராம். அதற்கு முக்கிய காரணம் இளையராஜாவின் பாடல் தான். தென்றல் வந்து தீண்டும்போது பாடலுக்காக அப்படத்தில் பாடல் கேசட்டை வாங்கியவர்கள் ஏராளம், அதன்படி அப்படத்தின் ஆடியோ கேசட் மட்டும் 20 லட்சத்திற்கு மேல் விற்பனை ஆனதாம். பாடல் கேசட் விற்பனை மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்த ஷேர் தொகையே 1.6 கோடியாம். இதில் படம் தியேட்டரில் நஷ்டமடைந்த தொகையை கழித்து பார்த்தால், 1 கோடிக்கு மேல் அவருக்கு லாபம் கிடைத்துவிட்டதாம்.

Read more Photos on
click me!

Recommended Stories