என் கிட்ட அது இல்லையா? வசியை திருமணம் செய்தது குறித்து மனம் திறந்த பிரியங்கா தேஷ்பாண்டே!

Published : Oct 28, 2025, 03:40 PM IST

Priyanka Deshpande finally opens up Vashi: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே முதல் முறையாக, வசியை திருமணம் செய்து கொண்டது ஏன்? என்பது பற்றி மனம் திறந்துள்ளார்.

PREV
16
பிரியங்கா தேஷ்பாண்டே:

விஜய் டிவியில் ஏராளமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமும், பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலமும் பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. தொகுப்பாளினி டிடிக்கு அடுத்தபடியாக மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர்.

26
தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள்:

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதனை தன்னுடைய தனித்துவமான ஸ்டைலில் தொகுத்து வழங்குவார். அதே போல் தன்னை யாராவது கலாய்த்தாலும் அதனை மிகவும் ஸ்போட்டிவாக எடுத்துக்கொள்ளும் தன்மை தான் இவரின் மிகப்பெரிய பலம். விஜய் டிவியில் இதுவரை, சூப்பர் சிங்கர், ஜோடி ஆர் யூ ரெடி, ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

36
பிரியங்காவின் விவாகரத்து:

பிரியங்கா, முன்னணி தொகுப்பாளினியாக இருந்த போது, தன்னுடைய வளர்ச்சிக்கு மூலதனமாக இருந்த, புரோகிராம் புரடியூசர் பிரவீன் குமார் என்பவரை காதலித்து, கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர், பிரியங்கா தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதும், குடும்ப கட்டுப்பாடுகளை மீறும் விதத்தில் நடந்து கொண்டது, இருவருக்கிடையே கருது வேறுபாடே ஏற்படுத்தியது. எனவே 3 வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

46
வசியுடன் திருமணம்:

பிரவீன் மிக விரைவாக பிரியங்காவை விட்டு விலகினாலும், பிரியங்காவால் இந்த பிரிவின் வெளியே வர சில வருடங்கள் ஆனது. ஒருவழியாக இந்த விவாகரத்து விஷயத்தை கடந்து வந்த பிரியங்கா, இலங்கை தமிழரும் டிஜேவுமான வசி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஏப்ரல் மாதம் 16ம் தேதி நடந்து முடிந்தது. பிரியங்காவின் வாழ்க்கையின் புதிய தொடக்கத்திற்கு ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை கூறினர்.

56
சொத்துக்காக திருமணமா?

அதே நேரம் நெட்டிசன்கள் பலர், பிரியங்கா, வசியை மறுமணம் செய்ய காரணம் அவர் ஒரு பணக்காரர் என்பது தான் சில விமர்சனங்களையும் முன் வைத்தனர். இதற்கு பிரியங்கா சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் " என்னுடைய திருமணம் முடிந்த பிறகு சில யூடியூப்களில், எனது கணவர் தீவு வைத்துள்ளார், ரூ. 200 கோடி சொத்து இருக்கு, அரசியல் குடும்பம் என பல தகவல்களை அள்ளிவிட்டனர்.

66
பிரியங்காவின் பதிலடி:

ஆனால் உண்மை அது இல்லை. என்னுடைய கணவர் வசி ஒரு இலங்கைத் தமிழர், அவர் குடும்பம் லண்டனில் வசித்து வருகிறார்கள். என் கணவரும் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார், அவ்வளவுதான். பணத்துக்காக கல்யாணம் செய்தேன் என கூறுகிறார்கள். நான் இத்தனை வருஷம் உழைச்சிருக்கேன், அந்த பணம் என்னிடம் இல்லையா? என கேள்வி எழுப்பி உள்ளார். இதன் மூலம் பணத்தை தாண்டி உண்மையான காதல் தான் வசியை திருமணம் செய்ய காரணம் என கூறி உள்ளார் பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories