2025-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் வந்தன. அதில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்களைப் பற்றி பார்க்கலாம்.
பான் இந்தியா படங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தற்போதெல்லாம் சிறு பட்ஜெட் படங்கள் கூட ஈஸியாக 100 கோடி வசூலை அடித்துவிடுகின்றன. அதுவே அந்தப் படங்களுக்கு பான் இந்தியா அளவில் வரவேற்பு கிடைத்தால் அவை 500 கோடி வசூலை வாரிக்குவித்துவிடுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியாகி இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸை பதம்பார்த்து அதிக வசூலை வாரிக் குவித்த டாப் 10 படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் என்னென்ன படங்கள் உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
211
10. எம்புரான்
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் ஹீரோவாக நடித்த படம் எம்புரான். லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருந்தது. அரசியல் த்ரில்லர் படமான இது பாக்ஸ் ஆபிஸில் ரூ.266.75 கோடி வசூலித்து இருந்தது.
311
9. குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்த படம் குட் பேட் அக்லி. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.274.80 கோடி வசூலித்து ஹிட்டானது.
2025-ம் ஆண்டு மலையாள சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே லோகா சாப்டர் 1 படத்தை சொல்லலாம். டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி சர்ப்ரைஸ் ஹிட் அடித்த இப்படம் 301.20 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
511
7. ஓஜி
டோலிவுட்டில் பவர் ஸ்டாராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் தான் ஓஜி. மாஸான கேங்ஸ்டர் படமான இது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்ததால் பாக்ஸ் ஆபிஸில் ரூ.303.75 கோடி வசூலித்து மாஸ் காட்டியது.
611
6. மகாவதார் நரசிம்மா
2025-ம் ஆண்டில் யாரும் எதிர்பாராத வெற்றியை ருசித்த படம் என்றால் அது மகாவதார் நரசிம்மா தான். அனிமேஷன் திரைப்படமான இதற்கு அதிரிபுதிரியான வரவேற்பு கிடைத்ததால் பாக்ஸ் ஆபிஸில் ரூ.322.75 கோடி வசூலை அள்ளியது.
711
5. வார் 2
அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவான ஸ்பை த்ரில்லர் திரைப்படம் தான் வார் 2. இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரூ.360.15 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது.
811
4. கூலி
2025-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் அள்ளிய திரைப்படம் கூலி தான். இப்படம் இந்திய அளவில் 4ம் இடத்தில் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.527.20 கோடி வசூலித்து இருந்தது.
911
3. சையாரா
2025-ம் ஆண்டு பாலிவுட்டில் பிரம்மிப்பை ஏற்படுத்திய படம் என்றால் அது சையாரா தான். புதுமுகங்கள் நடிப்பில் கம்மி பட்ஜெட்டில் உருவான இப்படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.569.10 கோடி வசூலை அள்ளி இருந்தது.
1011
2. சாவா
பாலிவுட் நடிகர் விக்கி கெளஷம் நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த படம் சாவா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். லட்சுமண் உடேகர் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.766.50 கோடி வசூலித்து இருந்தது.
1111
1. காந்தாரா சாப்டர் 1
செப்டம்பர் மாதம் வரை சாவா படம் தான் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை தக்க வைத்து இருந்தது. ஆனால் அக்டோபரில் ரிலீஸ் ஆன காந்தாரா அந்த சாதனையை தட்டிதூக்கி முதலிடம் பிடித்துள்ளது. ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கி இருக்கும் இப்படம் ரூ.820 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது.