நடிகர் அஜித் குமார் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது அங்கு வந்திருந்த ரசிகர் ஒருவர் தன்னைப் பார்த்து தலனு கத்தியதால் அவர் டென்ஷன் ஆனார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அடுத்ததாக அவர் தன்னுடைய 64வது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அப்படத்தையும் குட் பேட் அக்லி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார். அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் அஜித் குமார், இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்து சாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
24
திருப்பதியில் ஏகே தரிசனம்
ஆந்திராவில் உள்ள உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலையே திருப்பதி வந்த அஜித் குமார். அங்கு தங்கியிருந்து, இன்று காலை சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு, ஏழுமலையானை வழிபட்டார். தரிசனத்துக்கு பிறகு ரங்கநாதர் மண்டபத்தில் வைத்து அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாத்ததை வழங்கினார்கள். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அஜித் குமாரை பார்த்ததும் அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
34
டென்ஷன் ஆன அஜித்
ஒரு சிலர் தல தல என கத்தி ஆர்ப்பரிப்பதை பார்த்த அஜித், உடனே டென்ஷன் ஆகிவிட்டார். அப்போது அந்த ரசிகர்களிடம் இது கோவில், அமைதியா இருங்க என சொன்னதும் அவர்கள் கப்சிப் என ஆனார்கள். இதையடுத்து விறுவிறுவென நடையைக் கட்டிய அஜித்திடம், அங்கு வந்திருந்த வாய்ப்பேச முடியாத ரசிகர் ஒருவர், செய்கையாலேயே செல்பி கேட்டார். உடனே அவரிடம் இருந்து போனை வாங்கிய அஜித் குமார். தன் கையாலே செல்பி எடுத்து அந்த ரசிகருக்கு கொடுக்க அவரும் உற்சாகம் அடைந்தார்.
நடிகர் அஜித்குமார் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோவில்களுக்கு சென்று வருகிறார். கடந்த வாரம் கேரள மாநிலம் பாலக்காடில் உள்ள தன்னுடைய குல தெய்வமான பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தார் அஜித். அப்போது அவர் நெஞ்சில் அந்த கடவுளின் உருவத்தை பச்சைகுத்தி இருந்ததை பார்த்த ரசிகர்கள், அஜித்துக்கு கடவுள் மேல் இம்புட்டு பக்தியா என வாயடைத்துப் போயினர். தற்போது அவர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளதால், ஒருவேளை அவர் ஆன்மிக சுற்றுலாவில் உள்ளாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.