திரைப்பிரபலங்களின் திருமணம் என்பது சமீபகாலமாக வியாபாரம் ஆகி வருகிறது. இதன்மூலம் பலகோடி ரூபாய் சம்பாதித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நடிகை நயன்தாராவின் திருமணத்தை வீடியோ ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணமாகி குழந்தைகளே பிறந்துவிட்டது. ஆனால் இன்னும் இவர்களது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. அது எப்போ ரிலீஸ் செய்யப்படும் என்பது குறித்தும் இதுவரை எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இது ஒருபுறம் இருக்க தற்போது நடிகை ஹன்சிகாவும் இதே பார்முலாவை பின்பற்ற உள்ளாராம்.