தமிழ் சினிமா உலகில் குட்டி குஷ்பூ என ரசிகர்களால் செல்லமாக கொண்டாடப்பட்டவர் ஹன்சிகா. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இவர் பிரபலம் தான்.
முன்னதாக ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாராட்டுகளை பெற்றிருந்த இவர், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக நடித்து விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தில் வைதேகி என்னும் ரோலில் அறிமுகமானார் ஹன்சிகா மோத்வானி.
hansika
தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, வேட்டை மன்னன், சிங்கம் 2, பிரியாணி, தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், வாலு, அரண்மனை 2, புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...vijay : அரசியலுக்கு வரும் விஜய்?..துணை முதல்வரை கன்பார்ம் செய்த ரசிகர்கள் ...
hansika
இதற்கிடையே முன்னணி நடிகையாகி விட்டதால் தனது பாணியை மாற்ற எண்ணிய இவர் ஹாரர் மூவிகளை தேர்ந்தெடுத்தார். அதன்படி இவர் நடித்த அரண்மனை சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
hansika
சமீபத்தில் இவரது ஐம்பதாவது படமான மஹா படம் வெளியானது. இந்த படத்தில் இவரது முன்னாள் காதலர் சிம்பு காமியோ ரோலிங் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை.
hansika
இவருக்கு தமிழ் பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் பாலிவுட் பக்கமே திரும்பிவிட்டார். அதற்காக தனது உடலை கட்டுடலாக்கும் முயற்சியில் உள்ளார் ஹன்சிகா மோத்வானி.
hansika
அதற்காக ஒர்க் அவுட் செய்த ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லி பெல்லியாக மாறிவிட்டார். பின்னர் கவர்ச்சிகரமான உடை அணிந்து போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள போட்டோவும் வைரலாகி வைக்கிறது.