கடலில் ஒரு அட்வென்ச்சர் படம் எடுப்பது என்பது எளிதான காரியம் இல்லை என்றாலும், இதனை கிங்ஸ்டன் படக்குழு சிறப்பாக கையாண்டு உள்ளதாக கூறப்பட்டது. அதே போல் VFX காட்சி, படத்தொகுப்பு, மற்றும் இசை போன்றவை பாராட்டுகளை குவித்து வந்தாலும், கதையில் ஏற்பட்ட தொய்வு இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைக்க காரணமாக மாறியுள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் ரசிக்கும் விதமாக இப்படம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜிவி பிரகாஷ் இப்படம் ஹாரிபாட்டர் போல் இருக்கும் என கூறிய நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 'கிங்ஸ்டன்' திரைப்படம் முதல் நாளில், ரூ.90 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்பார்த்ததை விட முதல் நாள் வசூல் குறைவு என்றாலும், சனி - ஞாயிறு விடுமுறை நாட்களில் வசூல் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.