தளபதி விஜய் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில், இன்று தவெக கட்சி சார்பில் நடத்தப்படும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், தலையில் குல்லா அணிந்து பங்கேற்றார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும், முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய், கடந்த ஆண்டு தன்னுடைய அரசியல் என்ட்ரி குறித்து அதிரடியாக அறிவித்தா.ர் இதைத் தொடர்ந்து தன்னுடைய கட்சியின் சின்னம், கட்சியின் பாடல், ஆகியவற்றை அடுத்தடுத்து வெளியிட்டார்.
24
ஜனநாயகன்:
தற்போது கடைசியாக நடித்து வரும் 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பில் ஒரு புறம் விஜய் கவனம் செலுத்தி வந்தாலும், மற்றொரு புறம் அரசியல் பணிகளிலும் தீவிரமாக இறங்கி உள்ளார். இந்நிலையில் தவெக கட்சியின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் விழா சென்னை ராயப்பேட்டை ஓஎம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.
தவெக கட்சியின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் விழா
இதில் 3000 திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட நிலையில். அவர்களுக்காக தவெக கட்சியின் சார்பில் பிரம்மாண்ட விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு தவெக சார்பில் மட்டன் பிரியாணி, நோன்பு கஞ்சி, சிக்கன் 65, போன்ற உணவுகள் பரிமாறப்பட்டன.
44
இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தளபதி விஜய்:
இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், தளபதி விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இதில் விஜய் தலையில் குல்லா உடனும், வெள்ளை நிற வேஷ்டி அணிந்து கலந்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.