Tamannaah Breakup: விஜய் வர்மா இப்படி செய்தாரா? தமன்னா பிரேக்கப்புக்கு என்ன காரணம் - தீயாய் பரவும் தகவல்!

Published : Mar 08, 2025, 09:25 AM IST

நடிகை தமன்னா பாட்டியாவும், விஜய் வர்மாவும் பிரிந்துவிட்டதாக ஒருபுறம் தகவல்கள் பரவி வரும் நிலையில், இதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் சில தகவல்கள் கசிந்துள்ளது.  

PREV
15
Tamannaah Breakup: விஜய் வர்மா இப்படி செய்தாரா? தமன்னா பிரேக்கப்புக்கு என்ன காரணம் - தீயாய் பரவும் தகவல்!

தென்னிந்திய நடிகையான தமன்னா பாட்டியா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இருவரும் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் உறவு முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவருமே வெளிப்படையாக தங்களின் காதல் பற்றி, வெளியில் பேசியது இல்லை என்றாலும், விருது விழாக்கள், திரைப்பட விழாக்களில் ஜோடியாக கலந்து கொண்டு ரசிகர்களின் பார்வைகளை ஈர்த்தனர்.

25
அதிரடியாக முடிவுக்கு வந்த காதல் உறவு:

இந்த காதல் உறவு, திருமணத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக முடிவுக்கு வந்தாக கூறப்படும் தகவல், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமன்னா - விஜய் வர்மா இருவருமே ஒன்றாக இருக்கும் படி பதிவிட்ட புகைப்படங்களை கூட சமூக வலைத்தளத்தில் இருந்து  நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.

தோல்வியில் முடிந்த தமன்னா - விஜய் வர்மா காதல்? மீண்டும் சிங்கிளான மில்க் பியூட்டி!

35
தமன்னா - விஜய் வர்மாவின் பிரிவுக்கு காரணம் என்ன?

​​தமன்னா மற்றும் விஜய் வர்மாவின் உறவு முறிந்துவிட்டதாக வெளியாகும் தகவல், பாலிவுட்டில் மட்டுமல்ல, தற்போது தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் சென்சேஷனலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமன்னா - விஜய் வர்மாவின் பிரிவுக்கு காரணம் என்ன என்பது? குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

45
இந்த ஆண்டு திருமணம்

35- வயதை எட்டி விட்ட நடிகை தமன்னா, இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் தன்னுடைய கோரிக்கையை விஜய் வர்மாவிடம் வைத்துள்ளார். ஆனால் விஜய் வர்மாவுக்கு இப்போது திருமணம் செய்து கொள்வதில் பெரிதாக உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. இன்னும் சில வருடங்கள் காதலித்துவிட்டு பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதை தமன்னா மற்றும் அவருடைய பெற்றோர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு: எனக்கும் அதுக்கும் எந்த தொடர்பும் இல்லை; தமன்னா விளக்கம்!
 

55
திருமணத்துக்காக போராடி உறவில் இருந்து வெளியேறிய தமன்னா

இந்த பிரச்சனையே ஒரு கட்டத்தில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாக அமைந்ததோடு, இவர்களின் பிரிவுக்கும் காரணமாக அமைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. திருமணம் செய்து வரும் பிரச்சனைகளுக்கு பின்னர் பிரியும் சில பிரபலங்கள் உள்ள நிலையில், திருமணத்திற்காக வாக்குவாதம் செய்து தமன்னா பிரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!

Recommended Stories