வாட்டர் மிலன் ஸ்டார் திவாகரை நேரில் பார்த்தால் செருப்பாலயே அடிப்பேன் என பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான ஜிபி முத்து பேட்டி ஒன்றில் ஆவேசமாக பேசி இருக்கிறார்.
சமூக வலைதளத்தின் வளர்ச்சியால் அதன் மூலம் பாப்புலர் ஆனவர்கள் ஏராளம். இன்றைய சூழலில் இன்ஸ்டாகிராமில் 1 லட்சம் பாலோவர்கள் வைத்திருந்தாலே அவர்கள் தங்களை ஒரு செலிபிரிட்டியாக கருதிக் கொள்கிறார்கள். அப்படி இன்ஸ்டாகிராமில் கோமாளித்தனமான வீடியோக்களை போட்டு பேமஸ் ஆனவர் தான் திவாகர். சூர்யா நடித்த கஜினி பட தர்பூசணி காட்சியை ரீ கிரியேட் செய்து இவர் போட்ட வீடியோ வைரலானதை அடுத்து, இவர் தனக்கு தானே வாட்டர்மிலன் ஸ்டார் என பெயர்சூட்டுக்கொண்டார். இதையடுத்து நடிப்பு அரக்கன் என சொல்லி தனுஷ், சிவாஜி கணேசன் ஆகியோர் போல் நடிப்பதாக கூறி இவர் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை.
25
சர்ச்சையில் சிக்கிய வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர்
இன்ஸ்டாகிராமில் டிரெண்ட் ஆனதால், இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். சமீப காலமாக இவர் பேட்டி கொடுக்காத யூடியூப் சேனல்களே இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு எக்கச்சக்கமான பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்படி தான் கலாட்டா யூடியூப் சேனலில் பேட்டியளிக்க சென்றபோது இவரிடம் தொகுப்பாளர் சில காட்டமான கேள்விகளை கேட்டதும், தான் சொன்ன கேள்விகளை கேட்டால் பதிலளிப்பேன் இல்லையென்றால் சென்றுவிடுவேன் என்று கூறி பாதியிலேயே வெளியேறினார் திவாகர். இதுமட்டுமின்றி சமீபத்தில் சாதியைப் பற்றியும் இவர் பேசி இருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
35
திவாகரை விமர்சித்த ஜிபி முத்து
இப்படி தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வரும் திவாகர், ஒரு பேட்டியில் ஜிபி முத்து low class என்று கூறி இருந்தார். அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக ஜிபி முத்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசுகையில், நான் அவனை திட்டி வீடியோ போட்டதற்கு காரணம், அவர் சூரி அண்ணனை பற்றி பேசியது தான். முன்னதாக ஒரு பேட்டியில் சூரி அண்ணன் போல் சின்ன சம்பளம் வாங்கி என்னால் நடிக்க முடியாது என திவாகர் பேசி இருந்தார். அதைப் பார்த்து கடுப்பாகி தான் வீடியோ போட்டதாக ஜிபி முத்து கூறினார்.
சூரி அண்ணனை போல் ஒரு தங்கமான மனுசனை சினிமாவில் பார்க்க முடியாது என கூறி இருந்த ஜிபி முத்து, அவரை ஒரு முறை சந்தித்த போது தன்னை பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்து, அண்ணேன் உங்களோட பெரிய ரசிகன் என கூறினாராம் சூரி. அதுமட்டுமின்றி லாக்டவுன் சமயத்தில் உங்கள் வீடியோவை தான் பார்த்தேன் என்று சொன்னதாகவும் ஜிபி முத்து தெரிவித்தார். இப்படிப்பட்ட தங்கமான மனுஷனை பற்றி பேசி வீடியோ போட்டிருக்கானே, அவனை மட்டும் நேரில் பார்த்தால் கண்டிப்பா செருப்பாலேயே அடிப்பேன் என ஆக்ரோஷமாக பேசி இருக்கிறார் ஜிபி முத்து.
55
திவாகர் ஒரு தற்குறி
அதேபோல் திவாகர் சாதி பெருமை பேசும் ஆளாக இருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜிபி முத்து. எனக்கு இந்த ஜாதி பார்க்கும் பழக்கம் இல்லை. நான் அனைவரிடமும் பழகுவேன். நாம் போடும் வீடியோவை எல்லா சாதிக்காரர்களும் பார்க்கிறார்கள். எல்லாரும் பார்ப்பதால் தான் எனக்கு சாப்பாடு கிடைக்குது. நீயும் சோசியல் மீடியாவில் வந்தால் எல்லாரையும் சமமாக பார்க்க வேண்டும். இதுபோன்று தற்குறித்தனமாக பேசக் கூடாது. இந்த நாய் பேசுதுனு சொல்லி நம்ம மற்ற எல்லாத்தையும் அப்படி நினைச்சுட கூடாது என ஜிபி முத்து கூறி இருக்கிறார். அவரின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.